டெங்கு காய்ச்சலை குணப்படுத்த பல வழிகளை நாம் முயற்சிக்கிறோம். சில ஆயுர்வேத குறிப்புகளும் இதற்கு உதவலாம். இது குறித்து காண்போம்.
தேங்காய் தண்ணீர்
டெங்குவைத் தடுக்க தேங்காய் நீர் ஒரு சிறந்த மற்றும் பயனுள்ள வழியாகும். டெங்கு காய்ச்சலின் போது, காய்ச்சல் மற்றும் வாந்தி போன்றவை வருகின்றன. இதன் காரணமாக உடல் முழுவதுமாக நீரிழப்பு ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உடலை ஹைட்ரேட் செய்ய தேங்காய் நீரை உட்கொள்ளலாம்.
பப்பாளி இலைகள்
பப்பாளி இலைகள் டெங்குவின் அறிகுறிகளைக் குறைக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது. டெங்குவால் பிளேட்லெட்டுகள் குறைந்தவர்களுக்கு பப்பாளி இலைச் சாறு கொடுத்தால் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
வெந்தய இலைகள்
டெங்குவால் ஏற்படும் மூட்டு வலி மற்றும் தசை வலி ஆகியவற்றிலிருந்து வெந்தய இலை நிவாரணம் அளிக்கிறது. இதன் நுகர்வு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதற்கு வெந்தய இலைகளை தினமும் இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். அதன் பிறகு, மறுநாள் காலையில் எழுந்ததும், இந்த நீரை வடிகட்டி குடிக்கவும்.
வேப்ப இலைகள்
வேப்ப இலைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. மேலும் இதில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரஸ் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளன. இது டெங்கு வைரஸ் உடலில் வளர்ந்து பரவாமல் தடுக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, வேப்ப இலைகளும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.