தினந்தோறும் வெந்நீரில் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து குடித்துவர உடல் எடை குறைவதுடன், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளும் குறையும். சீரகத்தை வெந்நீரில் கலந்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்
நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
சீரகம் ஏராளமான நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது நோயெதிர்ப்புச் சக்தியை பலப்படுத்துகிறது. தினமும் இந்த நீரைக் குடித்து வர உடலில் நோயெதிர்ப்பு சக்தி மிகவும் வலுவடையும்
உயர் இரத்த அழுத்தத்திற்கு
சீரகத்தில் அதிகளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. வெந்நீரில் சீரகத்தை சேர்த்து அருந்துவது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்
நீரிழிவு நோய்க்கு
சர்க்கரை நோயாளிகளுக்கு சீரக தண்ணீர் மிகவும் நன்மை தரும். தினமும் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்து வர இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம்
வயிறு ஆரோக்கியத்திற்கு
வீக்கம், அசிடிட்டி, அஜீரணம், மற்றும் வயிற்று வலி போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு சீரகத் தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும். இவை செரிமானத்தை துரிதப்படுத்தி குடல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணத்தைத் தருகிறது
கர்ப்பகால நன்மைக்கு
கர்ப்பிணி பெண்கள் சீரகத் தண்ணீர் அருந்துவது செரிமானத்தை வலுவாக்கும். மேலும், சீரக நீர் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்குத் தேவையான என்சைம்களில் செயல்படுகிறது
உடல் எடை குறைய
சீரக நீர் அருந்துவது வளர்ச்சிதைமாற்றத்தை துரிதப்படுத்துகிறது. மேலும் உடலில் கொழுப்பை வேகமாகக் கரைக்க உதவுகிறது. இந்த சீரக நீர் அருந்துவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்
இவ்வாறு சூடான சீரக நீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்