பொசுபொசுனு அழகான முடிக்கு கிரீன் டீயை இப்படி யூஸ் பண்ணி பாருங்க.. அதுக்கு முன்னாடி இத தெரிஞ்சிக்கோங்க

How to use green tea for hair: கூந்தலை பட்டுப் போன்றதாகவும், மிருதுவாக மாற்றவும், வலிமையாகவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் கிரீன் டீ பெரிதும் உதவுகிறது. இதில் தலைமுடிக்கு கிரீன் டீ பயன்படுத்துவதன் நன்மைகளையும், அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
பொசுபொசுனு அழகான முடிக்கு கிரீன் டீயை இப்படி யூஸ் பண்ணி பாருங்க.. அதுக்கு முன்னாடி இத தெரிஞ்சிக்கோங்க


How to use green tea for hair care in your daily routine: அழகான மற்றும் ஆரோக்கியமான கூந்தலைப் பெற பலரும் பல்வேறு முயற்சிகளைக் கையாள்கின்றனர். இதற்கு சந்தையில் ஏராளமான பொருட்கள் இருந்தாலும், பலர் தங்கள் கூந்தல் பராமரிப்புத் தேவைகளுக்கு இயற்கையான பொருட்களையே விரும்புகின்றனர். அவ்வாறு கூந்தலை பளபளப்பாக மற்றும் ஆரோக்கியமாக வைக்க கிரீன் டீ உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். கிரீன் டீ ஆனது ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு வகை கஷாயம் ஆகும். இது தலைமுடி வழக்கத்தை மாற்றக்கூடும்.

தலைமுடிக்கு கிரீன் டீயைப் பயன்படுத்துவது முடி வளர்ச்சியை அதிகரிப்பது முதல் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்துவது வரை பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. கூந்தலுக்கு கிரீன் டீயை தொடர்ந்து பயன்படுத்துவது முடி தண்டுகளை வலுப்படுத்தவும், பளபளப்பைச் சேர்க்கவும் வழிவகுக்கிறது. கூடுதலாக, கிரீன் டீயின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் எரிச்சலூட்டும் உச்சந்தலையை ஆற்ற உதவுகிறது. மேலும், பொடுகைக் குறைத்து ஆரோக்கியமான கூந்தலுக்கு உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: உதிர்ந்த முடி மீண்டும் வளர இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யுங்க போதும்! முடி தாறுமாறா வளரும்

கிரீன் டீ பற்றி தெரியுமா?

ஹெல்த்ஷாட்ஸ் தளத்தில் குறிப்பிட்ட படி, கிரீன் டீ என்பது கேமல்லியா சினென்சிஸ் தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை தேநீர் ஆகும். இந்த கிரீன் டீ இலைகள் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்க வேகவைக்கப்படுகின்றன அல்லது வாணலியில் வறுக்கப்படுகிறது. இவை செறிவுள்ள ஆக்ஸிஜனேற்றிகளை பாதுகாக்கின்றன.

மேலும் இதில் காணப்படும் கேட்டசின்கள், பல சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளுக்குக் காரணமாக அமைகிறது. ஆய்வு ஒன்றில், முடிக்கு பளபளப்பை சேர்க்கவும், பல்வேறு முடி சார்ந்த நன்மைகளைத் தரவும் உதவுவதாக அறியப்படுகிறது.

முடிக்கு கிரீன் டீ பயன்படுத்துவது எப்படி?

கிரீன் டீ முடி கழுவுதல்

  • ஒரு கப் வலுவான பச்சை தேநீரைக் காய்ச்சி, அதை குளிர்விக்க விட வேண்டும்.
  • முடிக்கு ஷாம்பு தேய்த்து குளித்த பிறகு, இந்த குளிர்ந்த தேநீரை தலைமுடி மற்றும் உச்சந்தலையில் ஊற்ற வேண்டும்.
  • பிறகு மெதுவாக மசாஜ் செய்து, சில நிமிடங்கள் அப்படியே வைத்து பின் கழுவி விடலாம்.

கிரீன் டீ எண்ணெய்

  • கிரீன் டீ பைகளுடன் தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயை ஊற்றி சில மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • இந்த எண்ணெயை லேசாக சூடாக்கி, அதை முடி மற்றும் உச்சந்தலையில் ஊற்றி மசாஜ் செய்ய வேண்டும்.
  • இதை இரவு முழுவதும் அப்படியே வைத்து, மறுநாள் காலையில் கழுவி விடலாம்.

கிரீன் டீ ஹேர் மாஸ்க்

  • 2 தேக்கரண்டி தயிர் மற்றும் 1 தேக்கரண்டி தேனுடன், 2 தேக்கரண்டி கிரீன் டீ பவுடரைச் சேர்த்து கலக்க வேண்டும்.
  • இந்த ஹேர் மாஸ்க்கை முடி மற்றும் உச்சந்தலையில் தடவலாம். முடி முனைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.
  • பின்னர் தலைமுடியை 30 நிமிடங்கள் அப்படியே வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவ வேண்டும்.

கிரீன் டீ ஹேர் ஸ்ப்ரே

  • ஒரு கப் கிரீன் டீயைக் காய்ச்சி, அதை முழுமையாக குளிர்விக்க வேண்டும்.
  • பின்னர், இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலுக்கு ஊற்றி வைக்கலாம்.
  • இதை தலைமுடிக்கு தெளிப்பது, தலைமுடியைப் பளபளப்பாக்கவும், முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: வாரத்திற்கு 3 முறை உங்க தலையை மசாஜ் செய்யுங்க! இந்த பிரச்சனை எல்லாம் உங்களுக்கு வரவே வராது

முடிக்கு கிரீன் டீயின் நன்மைகள்

முடி வளர்ச்சியை ஊக்குவிக்க

முடிக்கு கிரீன் டீ பயன்படுத்துவது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. ஆய்வு ஒன்றில், இதில் உள்ள கேட்டசின், முடியின் நுண்ணறைகளைத் தூண்டுவதன் மூலம் செயல்படுகிறது. இது முடியின் நுண்ணறைகளுக்கு ஊட்டமளிப்பதுடன், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்குகிறது. இதன் மூலம் முழுமையான மற்றும் ஆரோக்கியமான முடியைப் பெறலாம்.

முடி உதிர்தலைத் தடுக்க

ஆய்வு ஒன்றில், முடி உதிர்தலில் ஒரு வகையான ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரீன் டீ ஒரு உதவிகரமான தீர்வாக அமைகிறது. இந்த பாதிப்பால், முடி நுண்குழாய்கள் சுருக்கமடைந்து, மெல்லிய, பலவீனமான முடியை ஏற்படுத்தி இறுதியாக முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் கிரீன் டீ பயன்பாடு முடி நுண்குழாய்களைப் பாதுகாக்கவும், ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்த

கிரீன் டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் எரிச்சலூட்டும் உச்சந்தலைக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இதன் ஆக்ஸிஜனேற்றிகள் வீக்கத்தைக் குறைக்கவும், அரிப்பு உச்சந்தலையை ஆற்றவும் உதவுகிறது. இது பொடுகுக்கு சிகிச்சையளிக்கவும், சிறந்த உச்சந்தலை சூழலை மேம்படுத்தவும் உதவுகிறது.

இவ்வாறு தலைமுடிக்கு கிரீன் டீயைப் பயன்படுத்துவது ஏராளமான நன்மைகளைத் தருகிறது. எனினும் இதை தலைமுடிக்குப் பயன்படுத்துவதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது. இதன் மூலம் அரிப்பு, சிவத்தல் அல்லது வீக்கம் போன்ற ஒவ்வாமை எதிர்வினையின் அறிகுறிகளைத் தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: முடி மெல்லிசா இருக்கா.? இந்த ஹேர் மாஸ்க் ட்ரை பண்ணுங்க.. சும்ம காடு போல முடி வளரும்.!

Image Source: Freepik

Read Next

ஹேர் சீரம் தடவுவதற்கான சரியான வழி என்ன? எப்போது எப்படி தடவனும் தெரியுமா?

Disclaimer