$
திருமண பந்தத்தை வலுவான மற்றும் நிறைவான உறவை ஏற்படுத்த தினந்தோறும் சின்ன, சின்ன முயற்சிகள் தேவை. அப்போது தான் திருமண வாழ்க்கை என்றும் மகிழ்ச்சியானதாகவும், ரொமெண்டிக்கானதாகவும் இருக்கும்.
எனவே தான் உங்களுடைய நாளை மகிழ்ச்சியானதாக தொடங்கவும், வாழ்க்கை துணையுடன் வலுவான பிணைப்பை உருவாக்கவும் ஏற்ற சில காலை நேர பழக்க வழக்கங்களை பரிந்துரைத்துள்ளோம்…
1.குட்மார்னிங் சொல்லலாமே:
படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது உங்களுடைய மனைவியின் முகத்தைப் பார்த்து சிரித்த முகத்துடன் கொஞ்சலாக ஒரு “குட் மார்னிங்” சொல்லிப்பாருங்கள்… அன்னைக்கு நாளே அவ்வளவு ஸ்பெஷலாக மாறிவிடும். பாசிட்டிவாக நாளை ஆரம்பிக்க உதவுவதோடு, உங்க பார்ட்னரோட அன்பு மற்றும் அரவணைப்பையும் அதிகரிக்கும்.

அதேபோல் வேலைக்கு கிளம்பும் போதும் சிரித்த முகத்துடன் "Bye..Bye.." சொல்ல மறக்காதீர்கள். அதன் பிறகு பாருங்கள் சின்ன சின்ன வார்த்தைகளில் தான் அன்பின் சூட்சமம் மறைந்திருக்கிறது என்பதை விரைவில் உணர்ந்து கொள்வீர்கள்.
2.காலை டிபனை ஒன்றாக சாப்பிடுங்கள்:
கணவனை ஆபிஸுக்கும், குழந்தைகளை ஸ்கூலுக்கும் அனுப்ப வேண்டியிருப்பதால் மனைவிமார்களின் காலை உணவு எப்போதுமே புத்துணர்ச்சி கொண்டதாக இருக்காது. எனவே மனைவியின் காலைப்பொழுதை கலர்ஃபுல்லாக மாற்றாக அவர்களுடன் சேர்ந்து காலை உணவை அல்லது காபியை சாப்பிடலாம்.

இது உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் மனைவியின் பிசியான நாளையும் மகிழ்ச்சியானதாக மாற்றும். மேலும் உங்களுடைய பிசியான நாளை ஆரம்பிக்கும் போது, அன்றைய திட்டங்கள், உணர்வுகள், எண்ணங்கள் குறித்து பகிர்ந்து கொள்ளலாம்.
3.தாங்க்யூ சொல்ல தயங்காதீங்க:
புருஷன், பொண்டாட்டிக்குள்ள எதுக்குங்க இந்த பார்மாலிட்டீஸ் எல்லாம் என நீங்கள் என நினைக்கலாம். ஆனால் மணமணக்கும் காபி, சுடசுட சுவையான சாப்பாடு என உங்கள் மனைவி பார்த்து, பார்த்து செய்து கொடுப்பதை வெறுமனே சாப்பிட்டுவிட்டு போகாமல், அதன் சுவையை பாராட்டுவதோடு நன்றி சொல்ல தயங்காதீர்கள்.

சரி, முகத்திற்கு நேராக சொல்ல தயங்கமாக இருக்கிறதா? ஆபிஸுக்குப் போய் ரொமெண்டிக்காக ஒரு குறுஞ்செய்தியை டைப் செய்து தட்டிவிடுங்கள். இது காலையில் உடற்பயிற்சி, தியானம், உற்சாகமூட்டும் இசையை கேட்பது போல் மனதிற்கு இனிமையான அனுபவத்தை தரும்.
4.ஐ லவ் யூ சொல்லுங்க:

“ஐ லவ் யூ” இந்த வார்த்தையின் மேஜிக் பல தம்பதிகளுக்கும் தெரிவதில்லை. கணவன் - மனைவிக்குள் அன்பை வெளிப்படுத்த கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது, கை குலுக்குவது போன்றவற்றை செய்யலாம். இந்த மாதிரியான உடல் ரீதியான தொடுதல் நல்ல உணர்வை தருவதோடு, காதல் ஹார்மோன்களை வெளியிட்டு நெருக்கம் மற்றும் பிணைப்பை உருவாக்கும்.
5.காலையில் கலந்துரையாடுங்கள்:
உங்களுடைய பிசியான நாளை தொடங்குவதற்கு முன்பு காலையில் சிறிது நேரம் ஒதுக்கி கலந்துரையாடுங்கள். காலையில் இப்படியொரு குவாலிட்டி டைமை செலவிடுவதன் மூலமாக, மனம் விட்டு பேச போதுமான நேரம் கிடைக்கும்.

காலையில் தம்பதி இணைந்து வாக்கிங் செல்வது, அன்றைய தினத்திற்கான முக்கியமான வேலைகளை திட்டமிடவும், இரவு அல்லது மாலையில் வெளியே செல்ல திட்டமிடவும் செய்யலாம்.