இன்று பலரும் அதிகளவு மன அழுத்தத்தால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆனால் இது நாள்பட்டதாக மாறும் போது உடலில் குறிப்பிடத்தக்க பிரச்சனைகள் ஏற்படலாம். இதில் அதிகளவு மன அழுத்தத்தால் உடலில் ஏற்படும் அறிகுறிகளைக் காணலாம்
தலைவலி
அதிகளவு மன அழுத்தம் அடிக்கடி தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலிக்கு வழிவகுக்கிறது. இவை தலை மற்றும் கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைவதால் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகும்
இதய பிரச்சனைகள்
மன அழுத்தம் காரணமாக, இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். நீண்ட கால மன அழுத்தம் ஆனது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம் தொடர்பான அட்ரீனல் அதிகரிப்புகள் ஒழுங்கற்ற இதயத்துடிப்பை ஏற்படுத்தும்
தசை பதற்றம்
மன அழுத்தம் ஏற்படுவதால் உடலில் தசைகள் சுருங்கப்பட்டு, பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இது உடலின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக கழுத்து, தோள்பட்டை, முதுகு போன்ற பகுதிகளில் வலியை ஏற்படுத்தக்கூடும்
குறைந்த நோயெதிர்ப்பு சக்தி
நீடித்த மன அழுத்தத்தின் காரணமாக, உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவிழக்கப்படுகிறது. குறைந்த நோயெதிர்ப்புச் சக்தியால் உடல் எளிதில் நோய்த்தொற்றுக்களால் பாதிக்கப்படலாம். குறிப்பாக, கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களே நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்க காரணமாகும்
செரிமான அசௌகரியம்
மன அழுத்தம் காரணமாக செரிமான ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இதனால் குமட்டல், வயிற்றுவலி மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது செரிமான அமைப்பின் சாதாரண செயல்பாடுகளை சீர்குலைக்கிறது