தசை வளர்ச்சிக்கு பெரும்பாலும் அசைவ உணவே உதவுவதாக பலர் கருதுகின்றனர். ஆனால்,சில சைவ உணவுகளும் தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. இதில் தசை வளர்ச்சிக்கு உதவும் புரதம், இரும்புச்சத்துக்கள், கால்சியம், ஒமேக-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சைவ உணவுகளைக் காணலாம்
குயினோவா
இது ஒரு சிறந்த முழுமையான புரத விருப்பமாக அமைகிறது. இதில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும் இதில் இரும்பு, நார்ச்சத்துக்கள் மற்றும் மக்னீசியம் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் அதிகமாக உள்ளது
கிரேக்க தயிர்
வழக்கமான தயிரை விட கிரேக்க தயிர் அதிக புரதம் நிறைந்ததாகும். இது ஒரு சிறந்த சிற்றுண்டியாக அமைகிறது. இதை ஸ்மூத்திகள், சாஸ்களில் சேர்க்கலாம்
நட்ஸ் மற்றும் விதைகள்
பாதாம், அக்ரூட் பருப்புகள், சியா விதைகள் மற்றும் சணல் விதைகள் போன்ற அனைத்துமே புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இதை ஓட்மீல், சாலட்கள் அல்லது தயிர் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்
டோஃபு
இது பனீர் போன்ற அமைப்பான சோயாபீன்களிலிருந்து தயாரிக்கப்படும் புரதம் நிறைந்த ஆதாரமாகும். இது சாலட்கள், சாண்ட்விச்களில் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இதை இறைச்சிக்குப் பதிலாக பல்வேறு உணவுகளில் சேர்க்கலாம்
பால் பொருட்கள்
பால், பாலாடைக்கட்டி, போன்ற பால் பொருட்கள் புரதத்தின் நல்ல வளமான ஆதாரங்களாகும். நிறைவுற்ற கொழுப்பு உட்கொள்ளலைக் குறைப்பதற்கு, குறைந்த கொழுப்பு வகைகளைத் தேர்ந்தெடுக்கலாம்
பருப்பு வகைகள்
பீன்ஸ், கொண்டைக்கடலை மற்றும் பருப்பு போன்ற அனைத்துமே புரதச்சத்துக்கள் நிறைந்ததாகும். இதில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை செரிமான ஆரோக்கியத்திற்கும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது
இலை கீரைகள்
கீரை, கேல் மற்றும் ப்ரோக்கோலி போன்ற இலை கீரைகள் தசை செயல்பாட்டை ஆதரிக்கவும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவும் தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்களை வழங்குகிறது