பல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை, பற்களைத் துலக்துவதும், நாக்கைச் சுத்தம் செய்வதும் அடங்கும். இந்நிலையில் சிலர் பற்களின் ஆரோக்கியத்திற்கு மவுத்வாஷைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இதை தினமும் பயன்படுத்துவது நல்லதா? அவ்வாறு தினமும் மவுத்வாஷ் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளைக் காணலாம்
மவுத்வாஷ்
இன்று சிலர் காலை அல்லது இரவு நேரங்களில் மவுத்வாஷைப் பயன்படுத்துவர். எனினும் சிலர் கூடுதல் நன்மைகளைப் பெற விரும்பி, ஒவ்வொரு முறையும் வாய் கொப்பளிக்கும் போது மவுத்வாஷ் உபயோகிப்பர்
நன்மைகள்
மவுத்வாஷ் பயன்படுத்துவது வாய் துர்நாற்றத்தை நீக்கி, நல்ல நறுமணத்துடன் வைக்க உதவுகிறது. இவை வாயில் உற்பத்தியாகக் கூடிய பாக்டீரியாக்களை அழிப்பதுடன், அதனால் ஏற்படும் வாய் சம்பந்தமான பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது
விளைவுகள்
மவுத்வாஷ் பற்களுக்கு நன்மைகளைத் தந்தாலும், சில இரசாயனங்களும் சேர்க்கப்படுகிறது. இதனால், மவுத்வாஷை அதிகளவு பயன்படுத்துவது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்
பற்கள் சேதமடைவது
பெற்றோர்கள் சிலர், குழந்தைகளுக்கு மவுத் வாஷைப் பயன்படுத்தி வாயை சுத்தம் செய்ய அனுமதிக்கின்றனர். ஆனால், குழந்தைகளின் பற்கள் மற்றும் வாய் மிகவும் மென்மையானது என்பதால், இதில் உள்ள ஆல்கஹால் பற்களை சேதப்படுத்தலாம்
வாய் வறட்சி அடைவது
மவுத்வாஷை ஒரு நாளைக்கு அதிகளவு பயன்படுத்தும் போது, அதிகளவு வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இவை வாயில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்து கெட்ட பாக்டீரியாக்கள் உருவாகக் காரணமாகிறது
வாய்ப்புண்
மவுத்வாஷில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் கொண்ட சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. இதில் உள்ள ஆல்கஹால் காரணமாக மவுத்வாஷை தினமும் பயன்படுத்துவதால் வாய்ப் பகுதியின் மென்மையான திசுக்களை சேதப்படுத்தி, அழற்சி மற்றும் புண்களை உண்டாக்கலாம்
மவுத்வாஷை விழுங்குவது
சில சமயங்களில் வாயை மவுத்வாஷ் கொண்டு கொப்பளிப்பதால், அது வாயின் உட்பகுதிக்குள் செல்லலாம். இவ்வாறு கொஞ்சம், கொஞ்சமாக உட்செல்வதால் மவுத்வாஷ் தலைவலி, சீரற்ற இதயத்துடிப்பு, தலை சுற்றல், வயிற்றுக்கோளாறு போன்றவற்றை ஏற்படுத்தலாம்