மழைக்காலம் வந்துவிட்டாலே நோய்த்தொற்றுக்களின் அபாயமும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தினமும் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்வது இயற்கையான பாதுகாப்பை வழங்குகிறது
ஏன் வெதுவெதுப்பான நீர்?
ஆயுர்வேதத்தில், வெந்நீரை உட்கொள்வது உடலிலிருந்து நச்சுக்களை ஜீரணித்து, நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. குறிப்பாக, மழைக்காலத்தில் இது மிகவும் நன்மை பயக்கும்
செரிமான அமைப்பை மேம்படுத்த
வெதுவெதுப்பான நீரை உட்கொள்வதன் மூலம் செரிமான செயல்முறையை விரைவுபடுத்தலாம். இவை உணவை சரியாக ஜீரணிக்க பெரிதும் உதவுகிறது
நச்சுகளை நீக்க
வெந்நீர் அருந்துவது உடலில் காணப்படும் நச்சுப்பொருள்களை நீக்க உதவுகிறது. இவை வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது
சளி, இருமலில் இருந்து நிவாரணம் பெற
வெதுவெதுப்பான நீர் குடிப்பது சளி, தொண்டை புண் மற்றும் மார்பு நெரிசலைப் போக்க உதவுகிறது. மேலும் இது வைரஸ் தொற்றுகளின் போது சுவாசத்தை மேம்படுத்துகிறது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
வெதுவெதுப்பான நீரை தொடர்ந்து குடிப்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் வைரஸ் தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்கலாம்
எப்போது குடிக்கலாம்?
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கலாம். மேலும், உணவுக்கு இடையிலும், பின்பும் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். குறிப்பாக, மழைக்காலத்தில் குளிர்ந்த நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். விரும்பினால், நீரில் சிறிது எலுமிச்சை அல்லது துளசியைச் சேர்க்கலாம்