உடலுக்கு ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். இது உடலுக்கு மென்மையான அனுபவத்தைத் தரக்கூடியதாக அமைகிறது.
மனச்சோர்வை வெல்ல
உடல் உறுப்புகளுக்கு ஆயில் மசாஜ் செய்யும் போது மனதை அமைதிப்படுத்துவதுடன், மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும், இது மனச்சோர்வைத் தடுக்க உதவும் சில ஹார்மோன்களின் வெளிப்பாட்டிற்கும் உதவுகிறது.
உடலில் ஆயில் மசாஜ் செய்யும் போது நன்கு அழுத்தப்பட்டு தசைகள் மசாஜ் செய்யப்படுகின்றன. இதில் நரம்புகள் தூண்டப்பட்டு சிறப்பாக செயல்பட உதவுகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு
இதயத்தின் அனிச்சை மையத்தினைக் கைகள் கொண்டுள்ளன. இதனால் மென்மையான அழுத்தத்தைப் பயன்படுத்தும் போது இதய செயல்பாடு மேம்பாடு அடைகிறது.
இரத்த ஓட்டம் சீராக வைத்திருக்க
மசாஜ் செய்யும் போது இரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை எளிதாக அகற்ற உதவுகிறது. மேலும், சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
ஆழ்ந்த உரக்கத்திற்கு வழிவகுத்தல்
மென்மையான ஆயில் மசாஜ் செய்யும் போது உடல் முழுவதும் தளர்வாக மாறும். இது ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.
வயிறு சார்ந்த பிரச்சனைக்கு
வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதால் உள்ளுறுப்புகளான பெருங்குடன், மண்ணீரல், கல்லீரல் போன்றவை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இது வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது.