உடலில் இயற்கையாகவே இரத்த சர்க்கரைஅளவைக் குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயின் அபாயத்தை நிர்வகிக்கலாம். இதன் மூலம் ஆற்றல் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க வீட்டில் தயாரிக்கப்படும் சில ஆரோக்கியமான பானங்களைக் காணலாம்
நெல்லிக்காய் சாறு
2 டீஸ்பூன் அளவு புதிய நெல்லிக்காய் சாற்றை சுமார் 1/2 கிளாஸ் குளிர்ந்த நீரில் கலக்க வேண்டும். இந்த பானத்தை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகமாக உள்ளது. இவை இரத்த சர்க்கரை அதிகரிப்பை ஒழுங்குபடுத்த உதவுகிறது
பாகற்காய் சாறு
1 கப் நறுக்கிய பாகற்காய் சாற்றைத் தண்ணீரில் கலந்து, அதை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதில் உள்ள பாலிபெப்டைட்-பி தாவர இன்சுலின், இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது
கற்றாழை, துளசி பானம்
ஒரு டீஸ்பூன் கற்றாழை சாறு மற்றும் சில நொறுக்கப்பட்ட துளசி இலைகளைத் தண்ணீரில் சேர்த்து குடிக்கலாம். இவை குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கவும், இன்சுலின் பதிலைப் பாதிப்பதில் அழற்சி எதிர்ப்பு விளைவுகளையும் ஆதரிக்கிறது
இலவங்கப்பட்டை டீ
ஒரு கப் தண்ணீரில் 10 நிமிடங்கள் 1 குச்சி இலவங்கப்பட்டையைச் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின் இதை வடிகட்டி, ஊறவைத்த பிறகு சூடாக அனுபவிக்கலாம். இவை இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைத்து இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது
வெந்தய தண்ணீர்
1 டீஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இதை மறுநாள் காலையில் வடிகட்டி குடிக்கலாம். இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் செரிமானத்தையும் கார்போஹைட்ரேட்டுகளின் உறிஞ்சுதலையும் மெதுவாக்குகிறது. இவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது
எப்போது குடிக்கலாம்?
சிறந்த முடிவுகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் இதைக் குடிக்கலாம். மேலும் ஆரோக்கியமான உணவு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையுடன் நிலைத்தன்மை முக்கியமானதாகும்
குறிப்பு
இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்கள் எளிமையானவை மற்றும் மலிவானவை ஆகும். மேலும் இவை இயற்கையாகவே இரத்த குளுக்கோஸ் சமநிலையை ஆதரிக்க உதவுகிறது. இதில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தினசரி எடுத்துக் கொள்ளலாம். எனினும், இதைத் தொடங்குவதற்கு முன் எப்போதும் ஊட்டச்சத்து நிபுணர் அல்லது மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்