எடையிழப்பு டூ சரும ஆரோக்கியம்.. பார்லி வாட்டர் தரும் அற்புத நன்மைகள் இதோ

By Gowthami Subramani
07 Jul 2025, 17:19 IST

தானிய வகைகளில் ஒன்றான பார்லி உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். பார்லி பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இதில் பார்லி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்

ஊட்டச்சத்துக்கள்

பார்லியில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது

எடை இழப்புக்கு

உடல் எடையை இழக்க விரும்புபவர்கள் தினமும் பார்லி தண்ணீரைக் குடிக்கலாம். குறிப்பாக, வெறும் வயிற்றில் குடிப்பது பசியைக் கட்டுப்படுத்தவும், எடை இழப்பு முயற்சிகளை ஆதரிக்கவும் உதவுகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

பார்லி நீரில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்துக்கள் வயிறு தொடர்பான பிரச்சினைகளைக் குறைக்க உதவுகிறது. இதைத் தொடர்ந்து குடிப்பது குடல் இயக்கத்தை எளிதாக்கி, மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் தருகிறது

இதய ஆரோக்கியத்திற்கு

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பார்லி நீர் குடிப்பது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இது தவிர, இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

பார்லி நீரில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இவை உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, தொற்றுகள் மற்றும் பல நோய்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த நீரைக் குடிப்பதன் மூலம் நாள்பட்ட நோய்களைக் குறைக்கலாம்

சருமத்தை பளபளப்பாக்க

இதில் உள்ள செலினியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களும், ஆக்ஸிஜனேற்றிகளும் சருமத்தை சுத்தமாகவும், பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது

பார்லி தண்ணீர் செய்முறை

பார்லியை நன்கு கழுவி, அதை ஒரு பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீரை எடுத்து அதில் சேர்க்க வேண்டும். பின் இதை நன்றாக கொதிக்க வைத்து, அதை வடிகட்டி, விரும்பினால் எலுமிச்சை சாற்றைச் சேர்க்கலாம். இது வெதுவெதுப்பான பிறகு குடிக்கலாம்