உடலில் செரிமானம் தொடர்பான கோளாறுகள் இருப்பின், அவை சில அறிகுறிகள் வைத்து கண்டறியப்படுகின்றன. செரிமானம் தொடர்பான பிரச்சனைக்கு என்னென்ன அறிகுறிகள் உள்ளன என்பதைக் காண்போம்.
வயிற்றுக்கோளாறு
வயிற்றில் அடிக்கடி தொந்தரவு ஏற்பட்டால், அது செரிமான பிரச்சனையாக இருக்கலாம். இதைத் தவிர்க்க நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்
மோசமான உணவுப்பழக்கம்
ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வதே பெரும்பாலும் செரிமான பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கும். இதைத் தவிர்க்க, உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்
தூக்கமின்மை
பல நேரங்களில் மக்கள் தூக்கமின்மை காரணமாக சிரமப்படுகின்றனர். இது செரிமான பிரச்சனைக்கான அறிகுறியாக இருக்கலாம். மேலும் நீடித்த மோசமான செரிமானம் தலைவலியை ஏற்படுத்தக்கூடும்
உடல் சோர்வு
மோசமான செரிமான அமைப்பின் காரணமாக உடல் சோர்வு ஏற்படக்கூடும். வயிற்று உபாதைகளின் காரணமாக உடலுக்குப் போதிய அளவு ஊட்டச்சத்து கிடைப்பதில்லை
முடி உதிர்வு
மோசமான செரிமான அமைப்பானது முடி வேகமாக உதிர வழிவகுக்கிறது. ஏனெனில் செரிமான பிரச்சனையானது முடியை முற்றிலும் வலுவிலக்கச் செய்யும்
சரியான செரிமானத்திற்கு
இது போன்ற அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள் செரிமான பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களாக இருப்பர். இவர்கள் தங்கள் அன்றாட உணவில் பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து, தானியங்கள் மற்றும் நட்ஸ் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்