செருமென் என்றழைக்கப்படும் காது மெழுகு, செருமினஸ் சுரப்பிகளில் இறந்த சரும செல்களுடன் இணைந்து, காது கால்வாயில் பல சுரப்புகளை உருவாக்குகிறது. இது பல்வேறு தூசி மற்றும் நுண்ணுயிரிகள் உட்புகாத வண்ணம் பாதுகாக்கிறது. எனினும், இது காலப்போக்கில் கால்வாயின் ஆழமன பகுதிகளிலிருந்து வெளிப்புற காதுக்கு நகர்கிறது. இதை வீட்டிலேயே இயற்கையாகவே அகற்றலாம்
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயை சூடாக்கி அதை காதில் வைப்பதன் மூலம் காதில் குவிந்துள்ள மெழுகு அடுக்கை அகற்ற முடியும். மேலும் இது காதில் எந்த வித தொற்றையும் ஏற்படுத்தாது ஆகும்
வெதுவெதுப்பான நீர்
காதுகளைச் சுத்தம் செய்ய வெதுவெதுப்பான நீர் உதவுகிறது. பருத்தி பஞ்சின் உதவியுடன், வெதுவெதுப்பான நீரை எடுத்து காதில் வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து காதில் இருந்து அதை வெளியேற்றி விடலாம்
பூண்டு எண்ணெய்
காதுகளில் உள்ள அழுக்குகளை நீக்க பூண்டு எண்ணெய் உதவுகிறது. இதில் வைரஸ் எதிர்ப்புப் பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் போன்றவை உள்ளது. காதில் பூண்டு எண்ணெயை வைப்பது, காதில் தேங்கியிருக்கும் மெழுகை நீக்கி பூஞ்சை தொற்றில் இருந்து பாதுகாக்க உதவுகிறது
ஆப்பிள் சைடர் வினிகர்
காதுகளை சுத்தம் செய்வதில் ஆப்பிள் சைடர் வினிகர் மிகவும் நன்மை பயக்கும். இதற்கு ஒரு ஸ்பூன் நீரில் சிறிது வினிகரை சேர்த்து, அதில் சில துளிகள் காதில் சேர்க்கலாம்
வெங்காய சாறு
வெங்காயத்தில் பல்வேறு பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உள்ளது. இவை காதில் உள்ள மெழுகுகளை நீக்க உதவுகிறது. இதற்கு வெங்காயத்தை வதக்கி அதன் சாற்றை எடுத்து, அதில் சில துளிகளை காதுகளில் சேர்க்கலாம்
காதுகளில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குவதில் இந்த வீட்டு வைத்தியங்கள் உதவுகிறது. எனினும், இந்த மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது