வைட்டமின் டி நமக்கு கட்டாயம் தேவை.. ஏன் தெரியுமா?

By Gowthami Subramani
23 Jul 2025, 23:12 IST

உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாக வைட்டமின் டி அமைகிறது. இவை வலுவான எலும்புகளுக்கு பெரிதும் உதவுகிறது. இதற்கு வைட்டமின் டி நிறைந்த உலர்ந்த பழங்களை சாப்பிடலாம்

வைட்டமின் டி

எலும்பு ஆரோக்கியத்தை பராமரிப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மற்றும் உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவைக் கட்டுப்படுத்துவது போன்ற முக்கியமான உடல் செயல்பாடுகளுக்கு கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் டி அவசியமாகும்

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த

நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டில் வைட்டமின் டி மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை அனைத்து வகையான தொற்றுகளிலிருந்தும் உடலைப் பாதுகாக்க வழிவகுக்கிறது

எலும்பு ஆரோக்கியத்திற்கு

வைட்டமின் டி உட்கொள்ளல் கால்சியம் உறிஞ்சுவதை எளிதாக்குகிறது. இவை எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது

தசை செயல்பாடு

சரியான தசை செயல்பாட்டிற்கு வைட்டமின் டி எடுத்துக் கொள்வது அவசியமாகும். இது மேம்பட்ட தசை செயல்பாட்டை ஆதரிக்கிறது

அதிகமாக உட்கொள்வது ஆபத்தா?

வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வது ஹைபர்கால்சீமியா போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். இது இரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரிக்கக்கூடிய ஒரு நிலையாகும். இது குமட்டல், பலவீனம் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கலாம்