உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாக நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் செரிமானத்தை மேம்படுத்த உதவும் நார்ச்சத்து மிக்க உணவுகளைக் காணலாம்
சியா விதைகள்
இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. ஊறவைத்த சியா விதைகளின் ஜெல் போன்ற அமைப்பு குடலியக்கங்களை ஊக்குவிக்க உதவுகிறது
கருப்பு பீன்ஸ்
கருப்பு பீன்ஸில் புரதத்துடன் நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இவை குடல் பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கக் கூடிய ஒரு ப்ரீபயாடிக்காக செயல்பட்டு ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது
பூசணி விதைகள்
இதில் ஆரோக்கியமான புரதங்கள், கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. மேலும் இதில் துத்தநாகம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளன. இது இதய ஆரோக்கியம் மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
ஓட்ஸ்
இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை மலத்தை மென்மையாக்கவும், குடலியக்க ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுகிறது. இதில் காணப்படும் பீட்டா-குளுக்கன் ஆரோக்கியமான குடல் சூழலை ஆதரிக்கிறது
ஆளி விதைகள்
ஆளி விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கல்லைப் போக்க உதவுகிறது. மேலும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது
குயினோவா
குயினோவாவில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் இரண்டுமே உள்ளது. இவை வீக்கம், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது
பாதாம்
இதில் ஆரோக்கியமான புரதம், கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் குடல் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது