சட்டுனு உடல் எடை குறைய துளசியை இப்படி சாப்பிடுங்க!!

By Devaki Jeganathan
17 Jul 2025, 16:53 IST

மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தால் உடல் எடை அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் எடையை குறைப்பது குதிரை கொம்பாய் மாறி வருகிறது. உடல் எடையை குறைக்க துளசியின் உதவியை நாடலாம். உடல் எடையை குறைக்க துளசியை எப்படி சாப்பிட வேண்டும் என பார்க்கலாம்.

சத்துக்கள் நிறைந்தது

துளசியில் உள்ள சத்துக்கள் உடல் எடையை குறைக்க உதவும். இதில், ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பாக்டீரியல், வைரஸ் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

துளசி இலையை மென்று சாப்பிடுவது?

நீங்கள் வீட்டில் இயற்கையாகவே உடல் எடையை குறைக்க விரும்பினால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் 4-5 துளசி இலைகளை மென்று சாப்பிடலாம்.

துளசியை தண்ணீர்

தினமும் காலையில் துளசி இலைகளைப் பறித்து நன்றாகக் கழுவவும். அதன் பிறகு, அவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும். இது எடை குறைக்க உதவும்.

துளசி டீ

அதிகரித்து வரும் உடல் எடையை கட்டுப்படுத்த, துளசி இலைகளால் செய்யப்பட்ட தேநீரையும் தினமும் அருந்தலாம். இதை வீட்டில் செய்வது மிகவும் எளிது.

துளசி டீ செய்முறை

இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். தண்ணீர் சூடானதும், அதில் 2-3 துளசி இலைகளைச் சேர்க்கவும்.

செய்முறை படி-2

பின் அதில் சிறிது இஞ்சி மற்றும் டீ தூள் சேர்க்கவும். சிறிது நேரம் மிதமான தீயில் டீயை கொதிக்க வைக்கவும். இப்போது இதை வடிகட்டியின் உதவியுடன் கோப்பைக்கு மாற்றவும். இதில், சிறிது வெல்லம் அல்லது தேன் கலந்து குடிக்கவும்.

துளசியின் நன்மைகள்

இந்த வழிகளில் துளசியை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். தவிர, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் வானிலை மாற்றத்தால் ஏற்படும் சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.