வைட்டமின் பி6 மூளை ஆரோக்கியத்திற்கும், மனநிலையை மேம்படுத்துவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் இது ஆற்றல் உற்பத்திக்கு உதவுவது மட்டுமல்லாமல், நரம்பியக்கடத்திகள் உருவாவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது
வைட்டமின் பி6 குறைபாடு காரணங்கள்
நீரிழிவு, அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் போன்ற சில மருத்துவ நிலைமைகள் வைட்டமின் பி6 குறைபாட்டிற்கான பொதுவான காரணங்களாகும்
வைட்டமின் பி6 நிறைந்த உணவுகள்
பால், முட்டை, கோழி, மீன், வாழைப்பழம், செறிவூட்டப்பட்ட தானியங்கள், கொண்டைக்கடலை, வெண்ணெய் போன்றவை வைட்டமின் பி6 நிறைந்த உணவுகளாகும்
இரத்த ஓட்டத்தை மேம்படுத்த
வைட்டமின் பி6 உட்கொள்ளல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், உடலின் அனைத்து பகுதிகளுக்கும் போதுமான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் உதவுகிறது
மனநிலையை மேம்படுத்த
வைட்டமின் பி6 ஊட்டச்சத்துக்கள் மனநிலையை சீராக்க உதவுகிறது. இவை சோர்வு, பதட்டம் போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட வழிவகுக்கிறது
கர்ப்ப காலத்தில் குமட்டல்
வைட்டமின் பி6 உட்கொள்ளல் கர்ப்ப காலத்தில் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுவதற்கான அறிகுறிகளைக் குறைப்பதாக கூறப்படுகிறது
மூளை செயல்பாடு
இவை மூளையில் ஆற்றல் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தவும், நரம்பியக்கடத்திகளை உருவாக்கவும், நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றன
இதய ஆரோக்கியத்திற்கு
வைட்டமின் பி6 ஆனது ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைப்பதன் மூலம் இரத்த நாளங்களைப் பாதுகாக்க உதவுகிறது. இவை இரத்த அணுக்கள் மற்றும் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதன் மூலம் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது