தினமும் சங்கு பூ டீ குடித்தால் இவ்வளவு நன்மையா?

By Balakarthik Balasubramaniyan
10 Aug 2023, 10:08 IST

சங்கு பூ உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதனால்தான் சித்த மருத்துவத்தில் மூலிகை பொருட்களாக பயணப்படுத்தப்படுகிறது. தற்போது, மக்கள் மத்தியில் ப்ளூ டீ பிரபலமாகியுள்ளது. சங்கு பூ டீ குடித்தால் கிடைக்கும் நண்மைகள் பற்றி பார்க்கலாம்.

எடை குறைப்பு

சங்கு பூக்களால் செய்யப்பட்ட டீயை தினமும் காலையில் குடித்து வந்தால் உடல் எடை குறையும். இந்த டீ வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.

BP குறையும்

ப்ளூ டீயில் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. சங்கு பூ டீ குடிப்பதன் மூலம் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

இரத்த சர்க்கரை

சங்கு பூ டீயில் நீரிழிவு நோய்க்கான எதிர்ப்பு பண்புகள் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அதை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனுடன், உயர் இரத்த சர்க்கரை பிரச்சனையையும் தடுக்கிறது.

நல்ல தூக்கம்

சங்கு பூ டீயை தினமும் பருகினால், இரவில் நல்ல தூக்கம் வரும். மேலும், இதில் உள்ள கூறுகள் மன அழுத்தத்தை போக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

சங்கு பூ டீயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. எனவே, அதை உட்கொள்வது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

சங்கு பூ டீ செய்முறை

சங்கு பூ டீ தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை எடுத்து, அதை வெதுவெதுப்பாக ஆக்குங்கள். இதன் பிறகு 4 முதல் 5 சங்கு பூக்களை சேர்த்து கொதிக்க விடவும்.

ஸ்டேப் 2

இதை 5-7 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர், அதை வடிகட்டி சிறிது தேன் கலந்து குடிக்கவும். இதை தினமும் காலையில் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.