நீல பாலாடைக்கட்டியில் புரதம், கால்சியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் ப்ளூ சீஸ் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காணலாம்
செரிமானத்தை மேம்படுத்த
நீல பாலாடைக்கட்டியில் புரோபயாடிக்குகள், நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. இவை சிறந்த செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
இந்த பாலாடைக்கட்டியில் கால்சியம் சத்துக்கள் உள்ளது. இவை இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தவும், இரத்த நாளங்களைப் பராமரிப்பதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது
தசை, திசுக்களை உருவாக்க
இதில் புரதங்கள் உள்ளன. இவை தசைகள், திசுக்களை உருவாக்க மற்றும் சரி செய்ய உதவுகிறது. குறிப்பாக, தினசரி புரத தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது
மூட்டு வலி குறைய
இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள், மூட்டு வலி போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது காலப்போக்கில் விறைப்புத்தன்மையைக் குறைக்க உதவுகிறது
நினைவாற்றலை மேம்படுத்த
இந்த சீஸில் வைட்டமின் பி12 உள்ளது. இதன் வழக்கமான நுகர்வு நினைவாற்றலை மேம்படுத்தவும், அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது
எலும்பு வலிமைக்கு
நீல சீஸில் அதிகளவிலான கால்சியம், புரோட்டீன் போன்றவை உள்ளன. இவை எலும்பு வலிமை, அடர்த்தியை ஆதரிக்கிறது. மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற அபாயத்தைக் குறைக்க உதவுகிறது