எலுமிச்சை ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்ல, கூந்தளுக்கும் நல்லது. இதை முறையாக முடியில் பயன்படுத்தினால், நீளமான கூந்தலை பெறலாம். நீளமான கூந்தலுக்கு எலும்பிச்சையை எப்படி பயன்படுத்துவது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எலுமிச்சை முடிக்கு நல்லதா?
எலுமிச்சையில் உள்ள பண்புகள் முடிக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. மேலும், இது உச்சந்தலையை ஈரப்பதமாக்க உதவுகிறது. இதனால், முடி மிருதுவாகவும், பட்டுப் போலவும் இருக்கும். இதன் அமிலத் தன்மை பொடுகுத் தொல்லையில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
கடுகு எண்ணெய்
கூந்தல் வலுவாகவும் அடர்த்தியாகவும் இருக்க கடுகு எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவலாம். இதற்கு முதலில் எண்ணெயை சற்று வெதுவெதுப்பாக எடுத்துக் கொள்ளவும்.
அலோ வேரா ஜெல்
அலோ வேரா ஜெல்லை எலுமிச்சை சாறுடன் கலந்தும் பயன்படுத்தலாம். இது முடிக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது. தவிர, இது உச்சந்தலையை ஈரப்பதமாக்க உதவுகிறது.
எலுமிச்சை ஜூஸ்
உங்கள் முடியை வலுப்படுத்த, உங்கள் தலைமுடியை எலுமிச்சை நீரில் கழுவலாம். இது முடியில் சேரும் அழுக்குகளை எளிதில் சுத்தம் செய்ய உதவுகிறது.
தேன்
பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபட எலுமிச்சை சாற்றில் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து தலைமுடியில் தடவவும். பின் 10 நிமிடம் கழித்து தலையை அலசவும்.
கூடுதல் குறிப்பு
எலுமிச்சை சாறு ப்ளீச்சிங் விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் உங்கள் முடியின் நிறத்தை கெடுக்கும். எனவே, குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்தவும்.