மூக்கின் ஓரங்களில் உள்ள கருமையை நீக்க, தேனை பயன்படுத்தலாம்.இதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் முகத்தை சுத்தம் செய்து, கருமையை நீக்குகிறது. மூக்கின் ஓரங்களில் தேனை தடவி வந்தால், அங்குள்ள உள்ள கருமை நீங்கிவிடும்.
எலுமிச்சை
எலுமிச்சையில் காணப்படும் சிட்ரிக் ஆசிட், சருமத்தின் PH அளவை சமநிலைப் படுத்துவதோடு, கருமையை நீக்கவும் உதவுகிறது இதற்கு எளிமைச்சையை மூக்கின் ஓரங்களில் தேய்த்து, ஐந்து முதல் 15 நிமிடங்கள்வரை அப்படியே விடுங்கள்.பின் உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.
பேக்கிங் சோடா
இதில் உள்ள ஆன்ட்டிசெப்டிக் பண்புகள் கருமையான சருமத்தை எளிதில் நீக்கும். பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். குறைந்தது 10 நிமிடங்களுக்கு வைத்திருங்கள்.பின்னர் குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தைக் கழுவலாம்.
கிரீன் டீ
கிரீன் டீச்சருமத்தில் ஏற்படும் கருமையை நீக்கும்.இதற்கு, கிரீன் டீ இலைகளை அரைத்துப் பேஸ்ட் தயார் செய்து கொள்ளுங்கள்.உங்கள் மூக்கின் ஓரங்களில் இந்தப் பேஸ்ட்டை தடவி 15 முதல் 20 நிமிடங்கள்வரை காத்திருக்கவும்.பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.
பச்சை பால்
சருமத்தில் உள்ள கருமையை நீக்க, பச்சை பாலை பயன்படுத்தலாம். இதில் உள்ள லாக்டிக் ஆசிட் சருமத்தில் ஏற்படும் கருமையை நீக்கும்.பச்சை பாலை மூக்கின் ஓரங்களில் தடுவி மென்மையாக மசாஜ் செய்யவும்.
நன்றி
இந்த அனைத்து வீட்டு வைத்தியங்களின் உதவியுடன் மூக்கின் ஓரங்களில் உள்ள கருமையை எளிதாக நீக்கலாம்.மேலும் உடல்நலம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு onlymyhealth.com ஐ படிக்கவும்