$
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல் அழைப்புகள் தகவல் பரிமாற்றத்தின் ஒரு பிரதான அங்கமாகிவிட்டது. சில நபர்களுக்கு தொலைபேசி அழைப்பை தொடர்ந்து பெறுவது என்பது கவலை அல்லது அசௌகரியமான உணர்வுகளை ஏற்படுத்தும். Phone Call Anxiety, டெலிஃபோபியா அல்லது தொலைபேசி பயம் என அழைக்கப்படுகிறது. மொபைல் போனால் ஏற்படும் சமூக கவலையில் இது ஒரு குறிப்பிட்ட விஷயமாகும்.
Phone Call Anxiety அறிகுறிகள்
கவனிக்க வேண்டிய சில அறிகுறிகள் இதோ:
போன் அழைப்பு கவலையின் தனிச்சிறப்பு அறிகுறிகளில் ஒன்று, ஃபோன் அழைப்புகளை செய்வதையோ அல்லது பெறுவதையோ தவிர்க்க வேண்டும் என வலுவான ஆசை ஏற்படும். வேகமாக கட் செய்ய நினைப்பீர்கள். இதை தவிர்ப்பதற்கு மெசேஜ் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு முறைகளை மேற்கொள்ளுங்கள்.
உடல் அறிகுறிகள்
Phone Call Anxiety என்பது பலவிதமான உடல் அறிகுறிகளை வெளிப்படுத்தும். வேகமான இதயத் துடிப்பு, வியர்வை, நடுக்கம், மூச்சுத் தினறல் அல்லது மனப் பதற்றம் போன்றவைகளை ஏற்படுத்தும். எதிலும் கவனக் குறைவாக இருப்பீர்கள். அசௌகரியமான செயல்பாடாக அனைத்தும் இருக்கும்.
Phone Call Anxiety உள்ளவர்கள் பெரும்பாலும் தொலைபேசி உரையாடல்களின் போது எதிரில் இருப்பவர்கள் தங்களை தவறாக எடுத்துக் கொள்வார்கள் என்ற பயம் இருக்கும். தங்கள் வார்த்தைகளில் தடுமாறுவார்கள், திறமையற்றவர்களாக தங்களை கருதுகிறார்கள். இந்த பயம் சுய உணர்வு மற்றும் அதிக கவலைக்கு வழிவகுக்கும்.

அழைப்புகளை தொடங்குவதும் முடிப்பதும் சிரமம்
Phone Call Anxiety கால்லை அட்டண்ட் செய்யும் போதே அசௌகரியமாக உணருவார்கள். தங்களது உரையாடலை பற்றி அதிகமாகச் சிந்திப்பார்கள். தாங்கள் பேச விரும்புவதை ஒத்திகை பார்ப்பார்கள். அழைப்பை முடிப்பதையும் அசௌகரியமாக உணருவார்கள். காரணம், மோசமான விடைபெறுகிறோமோ என்ற கவலை அவர்களுக்கு இருந்துக் கொண்டே இருக்கும்.
சரியான தீர்வு
தொலைபேசி அழைப்பு மூலம் தகவலை பரிமாறுவதற்கு பதில் மெசேஜ் அல்லது மெயில் மூலமாக உரைகளை பரிமாறுங்கள். குறுகிய காலத்திற்கு தங்கள் தகவலை எழுதியே அனுப்புங்கள். மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தங்களுக்கோ அல்லது தங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ இருந்தால் உடனே நிபுணர்களின் ஆதரவை பெற பரிந்துரைப்பது சிறந்த முடிவு. வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் தொலைபேசி என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்றாலும் அதை பாதுகாப்பாக பயன்படுத்துவது மிக அவசியம்.
Image source: freepik