வாக்கிங் போகும் போது இந்த தவறுகளைச் செய்யாதீங்க...!
By Kanimozhi Pannerselvam
08 Mar 2025, 23:54 IST
தலை குனியாதீர்கள்
நீங்கள் வாக்கிங் செல்லும் போது, குனிந்து நடக்கக்கூடாது, இது உங்கள் உடல் நிலையைக் கெடுக்கும். நடக்கும்போது எப்போதும் நேராக நின்று நடக்க வேண்டும். தவறுதலாக கூட இந்த தவறை செய்யாதீர்கள்.
மோசமான தோரணை
ஒரு பக்கமாக சாய்ந்து கொள்வது, இடுப்பை ஆட்டிக்கொண்டே செல்வது, முதுகை வளைத்துக் கொள்வது போன்ற தவறுகளை வாக்கிங் செல்லும் போது செய்யக்கூடாது. இது முதுகு தசைகளில் மோசமான பின்விளைவுகளை தரும்.
மிக வேகமாகத் தொடங்குவது சோர்வை ஏற்படுத்தும் மற்றும் காயம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
இந்த உணவுகளை உண்ணாதீர்கள்
கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டுவிட்டு வாக்கிங் சென்றால், அது விரைவில் சோர்வை ஏற்படுத்தும்.
இயர்பட்ஸ் அல்லது ஹெட்ஃபோன்
இயர்பட்கள் அல்லது ஹெட்ஃபோன்களை அணிவது சுற்றுப்புறத்தில் இருந்து உங்களை தனிமைப்படுத்தும். இதனால் வாகனங்கள் அல்லது ஜாக்கிங் செல்பவர்களைக் கவனிக்காமல் சென்று விபத்தில் சிக்கக்கூடும்.