தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா?

By Kanimozhi Pannerselvam
08 Dec 2024, 12:02 IST

செரிமானம்

செவ்வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை போக்கவும் உதவும்.

இதய ஆரோக்கியம்

செவ்வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது, இது ஆரோக்கியமான இரத்த அழுத்தத்திற்கு பங்களிக்கும்.

ஆற்றல் மூலம்

செவ்வாழைப்பழம் இயற்கயான சர்க்கரைகள் உள்ளன, அவை ஆற்றலுக்கு உடனடி மற்றும் நீடித்த ஊக்கத்தை அளிக்கும்.

எடை இழப்பு

செவ்வாய் வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது மனநிறைவை அதிகரிக்கவும், அதிகமாக சாப்பிடுவதை குறைக்கவும் உதவும்.

நோய் எதிர்ப்பு அமைப்பு

செவ்வாழைப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன, அவை உங்கள் உடலுக்கு எரிபொருளை வழங்கவும், நோய்களைத் தடுக்கவும் உதவும்.

முடி ஆரோக்கியம்

செவ்வாழைப்பழம் பொடுகைக் கட்டுப்படுத்தவும், முடியை ஈரப்படுத்தவும் உதவும். தேங்காய், எள் அல்லது பாதாம் எண்ணெயுடன் ஹேர் மாஸ்க்கில் அவற்றைப் பயன்படுத்தலாம்.

மனநலம்

செவ்வாழைப்பழங்களில் வைட்டமின் பி6 உள்ளது, இது டிரிப்டோபனை செரோடோனின் ஹார்மோனாக மாற்ற உதவுகிறது. இந்த ஹார்மோன் மனதிற்கு நல்ல உணர்வைத் தரக்கூடியது.

மாதவிடாய் சுழற்சி

செவ்வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 உள்ளது, இது மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும். அவற்றில் பொட்டாசியம் உள்ளது, இது மாதவிடாய் சுழற்சியின் போது வயிற்றுப் பிடிப்பைக் குறைக்க உதவுகிறது.