சரசரவென உடல் எடை குறைய கற்றாழையை இப்படி சாப்பிடுங்க...!

By Kanimozhi Pannerselvam
23 Feb 2025, 23:06 IST

கற்றாழை எப்படி உதவும்

கற்றாழை நமது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் நம் உடலில் உள்ள கலோரிகள் விரைவாக கரையும். நாள் முழுவதும் அதிக கலோரிகளை உட்கொள்வதால் அவதிப்படுபவர்கள் கற்றாழையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது.

டிடாக்ஸ்

கற்றாழையில் உள்ள பண்புகள் உடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்க உதவுகிறது. இதனால் வளர்சிதை மாற்றம் மேம்பட்டு, உடலில் கொலஸ்ட்ரால் குறைவாக சேமிக்கப்படும். மேலும் எடையும் விரைவாக குறையும்.

இப்படி எடுத்துக்கோங்க

காலையில் வெறும் வயிற்றில் அல்லது சாப்பிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக ஒரு டீஸ்பூன் கற்றாழை சாற்றை எடுத்துக் கொண்டால், அது நல்ல பலனைத் தரும்.

அலோவேரா ஜெல்

கற்றாழை தண்டினுள் இருக்கும் ஜெல்லை சாப்பிடுவதும் உடல் எடையைக் குறைக்க உதவும். சாப்பிடுவதற்கு முன் ஜெல்லை நன்கு கழுவ வேண்டும். அதேபோல், நிபுணர்களின் ஆலோசனையின் படி உங்களுக்குத் தேவையான அளவு எடுத்துக்கொள்வது நல்லது.

தேன் + கற்றாழை

கற்றாழை ஜூஸில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். இது நச்சுத்தன்மையை நீக்குகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

சாலட்

கற்றாழை ஜெல்லை சில ஸ்மூத்திகள் மற்றும் சாலட்களில் சேர்த்து பயன்படுத்தலாம். இதன் காரணமாக, நாம் அறியாமலேயே அதன் கசப்பு சுவையை மறந்து சாப்பிடலாம்.