எடையைக் குறைக்க மூணு வேளையும் எவ்வளவு கிராம் சாப்பிடனும் தெரியுமா?

By Kanimozhi Pannerselvam
06 Jan 2025, 08:01 IST

காலை டிஃபனுக்கு மூன்று இட்லி அல்லது 200 கிராம் பொங்கல் அல்லது உப்புமா, சிறு வெங்காயச் சட்னி, பாசிப்பருப்பு சாம்பார் எடுத்துக்கொள்ளலாம்.

பகல் 11 மணிக்கு 150 மி.லி. மோர் அல்லது எலுமிச்சைச்சாறு, 50 கிராம் சுண்டல் சாப்பிடுங்கள்.

மதியம் பிரியாணி, இறைச்சி வேண்டாம். 300 கிராம் சம்பா அரிசி சாதம் அல்லது முழு கோதுமையில் ஆன 2 சப்பாத்தி, 200 கிராம் பருப்பு அல்லது சாம்பார், ரசம், மோர், 200 கிராம் கீரை, ஒரு காய்கறி, மீன் ஒரு துண்டு சாப்பிடுங்கள்.

மாலையில் 150 மி.லி பால் கலக்கப்பட்ட அல்லது கலப்படாத தேநீர் அல்லது பழச்சாறு,காய்கறி சூப், 50 கிராம் முளைக்கட்டிய பயிறு வகைகள் அல்லது பழ சாலட் சாப்பிடலாம்.

இரவில் சாதம், பூரி வேண்டாம். 3 சோள தோசை அல்லது 3 சப்பாத்தி 200 மி.லி. சாம்பார் அல்லது காய்கறி குருமா, 100 மி.லி. தக்காளிச் சட்னி சாப்பிடுங்கள்.

படுக்கப் போகும் முன் 150 மி.லி பால், ஒரு பழம் சாப்பிடலாம்.