குளிர் கால சரும பிரச்சனைகளை சமாளிக்க இந்த ஒரு எண்ணெய் போதும்!
By Kanimozhi Pannerselvam
29 Nov 2024, 21:40 IST
சரும வறட்சி
பாதாம் எண்ணெய் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. இதில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. தூங்குவதற்கு முன் பாதாம் எண்ணெயை தோலில் தடவினால், சருமம் பளபளக்கும்.
கருவளையம்
தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு கண்களுக்குக் கீழே பாதாம் எண்ணெய்யை தடவி வந்தால், இரண்டே வாரங்களில் வித்தியாசத்தைக் காணலாம்.
சருமத்தில் உருவாகும் கருப்பு நிறத்தை குறைக்கவும் பாதாம் எண்ணெய் பயனுள்ளதாக இருக்கும். சில துளிகள் பாதாம் எண்ணெய் உடன் சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை கலந்து சருமத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
உதடு வெடிப்பு
குளிர்காலத்தில் உதடு வெடிப்பு என்பது பொதுவான பிரச்சனையாகும். இதைப் போக்க பாதாம் எண்ணெய்யைத் தடவலாம். இது உதடுகள் கருப்பாக்குவதையும் தடுக்கும்.
ஸ்ட்ரெச்மார்க்ஸ்
சிறிது பாதாம் எண்ணெயை தடவி ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் உள்ள இடத்தில் மசாஜ் செய்யவும். குளித்த உடனேயே இதைச் செய்யுங்கள்.
குதிகால் வெடிப்பு
குளிர் கால குதிக்கால் வெடிப்பில் இருந்து நிவாரணம் பெற இரவில் அதன் மீது பாதாம் எண்ணெய்யைத் தடவுங்கள். காலையில் வெது வெதுப்பான நீரில் கழுவினால் சரும பிரச்சனை சரியாகும்.