முகப்பரு அதிகமா இருக்கா? ஆலோவேரா ஜெல்லை இப்படி பயன்படுத்துங்க
By Balakarthik Balasubramaniyan
29 Sep 2023, 15:00 IST
முகப்பரு
முகப்பருக்களை நீக்க உதவும் இயற்கையான வழிமுறைகளில் கற்றாழையும் ஒன்று. முகப்பரு நீங்க கற்றாழையை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்
தூய ஆலோவேரா ஜெல்
கற்றாழை இலையை வெட்டி ஜெல்லை மட்டும் முகத்தில் நன்கு தடவி இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். பின் காலையில் கழுவி விட வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வர முகப்பருவை நீக்கலாம்
எலுமிச்சைச் சாறு முகப்பரு உள்ளிட்ட பல்வேறு தோல் பிரச்சனைகளுக்கு உதவுகிறது. எலுமிச்சைச் சாறு மற்றும் அலோவேரா ஜெல் கலந்து முகத்திற்கு தடவி வரலாம்
சர்க்கரை, எண்ணெயுடன்
முகத்தைக் கழுவிய பின் அலோவேரா ஜெல், ஜோஜோபா எண்ணெய், மற்றும் சர்க்கரை கலவையைச் சேர்த்து மசாஜ் செய்யவும். இது தோலில் இறந்த செல்களை நீக்க உதவுகிறது
ஆப்பிள் சைடர் வினிகருடன்
ஆப்பிள் சைடர் வினிகரில் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளது. இவை முகப்பருவை குணப்படுத்த உதவுகிறது. கற்றாழைச் சாருடன், ஆப்பிள் சைடர் வினிகரை நீருடன் சேர்த்து முகத்தில் டோனராகப் பயன்படுத்தவும்
வெள்ளரிக்காய் மற்றும் ரோஸ்வாட்டருடன்
கற்றாழை ஜெல்லை வெள்ளரிக்காய் மற்றும் ரோஸ்வாட்டருடன் சேர்த்து தடவிவர, முகப்பருக்கள் நீங்கி பிரகாசமான முகத்தைப் பெறலாம்
குறிப்பு
கற்றாழைகளை மற்ற பொருள்களுடன் கலந்து பயன்படுத்த விரும்புபவர்கள், அவர்களின் தோல் நிலைகளுக்கு ஏற்ப மருத்துவ ஆலோசனை பெற்று பயன்படுத்துவது நல்லது