மழையில் சருமத்தின் பிசுபிசுப்பு தன்மையை போக்குவது எப்படி?

By Karthick M
03 Jul 2024, 22:58 IST

மழையின் காரணமாக வானிலையில் ஈரப்பதம் காணப்படும், இதனால் தோலில் பிசுபிசுப்பு தன்மை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதிலிருந்து விடுபட உதவும் வழிகளை பார்க்கலாம்.

தயிர் மற்றும் மஞ்சள்

சருமத்தின் பிசுபிசுப்பை நீக்க தயிர் மற்றும் மஞ்சள் பயன்படுத்தலாம். 1 ஸ்பூன் தயரில் 2 சிட்டிகை மஞ்சள் கலந்து தடவவும். இது சருமத்தின் எண்ணெய் பசையை நீக்க உதவும்.

முகம் கழுவுதல்

மழைக்காலத்தில் சருமத்தின் அதிக ஒட்டும் தன்மையை எதிர்கொள்ள, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது நல்ல தரமான ஃபேஸ் வாஷ் மூலம் முகத்தை கழுவ வேண்டும்.

தக்காளி

தக்காளி சருமத்தின் ஒட்டும் தன்மையை போக்க உதவும். இது அஸ்ட்ரிஜென்ட் பண்புகளை கொண்டுள்ளது. இது எண்ணெய் சருமத்திலிருந்து நிவாரணம் அளிக்கும்.

சந்தனம்

சந்தனம் மற்றும் தயிர் கலவையை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் கூடுதல் எண்ணெயில் இருந்து நிவாரணம் அளிக்கும். இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது.

அலோவேரா

கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவி மசாஜ் செய்தால் எண்ணெய் பசை சரும பிரச்சனையை குறைக்கலாம். இது கரும்புள்ளிகள் இருந்து சருமத்திற்கு நிவாரணம் அளிக்கும்.