அழகாக காட்சியளிக்க வேண்டுமென, சிலர் தினமும் மேக்கப் செய்வர். ஆனால், இதில் உள்ள இரசாயனப் பொருள்கள் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன
சரும நோய்கள்
சருமப் பொலிவுக்காக அழகு சாதனப் பொருள்களில் சேர்க்கப்படும் இரசாயனப் பொருள்கள் சருமம் சேதமடைகிறது. கிரீம் அப்ளை செய்த பிறகு, வெயிலில் நிற்கும் போது சரும எரிச்சல் ஏற்படுவதை உணரலாம்
காஜல், ஐ ஷேடோ, மஸ்காரா போன்றவற்றை கண்களுக்கு உபயோகப்படுத்தும் போது கண் சார்ந்த தொற்றுகள் ஏற்படலாம்
புற்றுநோய் பாதிப்பு
பல அழகு சாதனப் பொருள்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஜிங்க் ஆக்ஸைட், பேரியம் சல்ஃபேட் உள்ளிட்டவை இருக்கும். இவை தோல் புற்றுநோயை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது
மூளை செயல்பாடு பாதிப்பு
உதட்டிற்குப் பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கில் லெட், காட்மியம், அலுமினியம் போன்ற வேதிக்கலவைகள் உள்ளன. இவை நரம்பு மற்றும் மூளை செயல்பாடுகளை பாதிக்கலாம்
சரும அலர்ஜி
அதிகப்படியான அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தும் போது சருமத்தில் அழற்சி ஏற்பட்டு, அரிப்பு, எரிச்சல் போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது
முதுமை தோற்றம்
சருமத்திற்கு தினமும் ஒப்பனைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் சருமத்தில் சுருக்கங்கள், மென்கோடுகள் போன்றவை ஏற்படலாம்