முகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் இன்று பலரும் முகப்பரு பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். சிலர் பருக்களைக் கிள்ளும் போது அல்லது உடைக்கும் போது அதிகளவு பருக்கள் உண்டாகலாம். இதனைத் தவிர்க்க சில வீட்டு வைத்தியங்கள் உதவுகின்றன
சுத்தமான நீரில் கழுவுதல்
முகத்தில் இருக்கும் பருக்களை நீக்க எளிமையான முறையாக சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதற்கு தினமும் ஐந்து முறையாவது சுத்தமான நீரில் கழுவ வேண்டும்
வெள்ளரிக்காய்
வெள்ளரிப்பிஞ்சுவை நன்கு அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் அப்ளை செய்து, காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவுவதன் மூலம் பருக்களை நீக்கலாம். வெள்ளரிக்காயுடன் பப்பாளி அல்லது தக்காளிப்பழம் சேர்த்து மசித்து போடலாம்
பாசிப்பயறு மாவு
பாசிப்பயறு மாவில் பசும்பாலைக் கலந்து குழைத்து பரு உள்ள இடத்தில் தடவி காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவி வர முகத்தில் உள்ள பருக்களை நீக்கலாம். இவை முகத்துவாரங்களில் உள்ள அழுக்குகளை நீக்க உதவுகிறது
தேன்
தேனுடன் மஞ்சள் சேர்த்து பருக்கள் மீது தடவி வந்தால் முகப்பருக்களை நீக்கலாம். இதனுடன் நச்சுக்களை நீக்க உதவுகிறது
கற்றாழை, மஞ்சள்
இதில் உள்ள என்சைம்கள் சருமத்திற்கு நெகிழ்வுத் தன்மையைத் தருகிறது. சரும துவாரங்களில் உள்ள அழுக்கு மற்றும் கிருமிகளை நீக்கி சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது
எலுமிச்சைச் சாறு
முகப்பருக்கள் உள்ள இடத்தில் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து நன்றாக காய்ந்ததும் ஐஸ் கட்டிகள் வைத்து மசாஜ் செய்யலாம். அதன் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி வர முகப்பருக்களை நீக்கலாம்
வாழைப்பழத் தோல்
வாழைப்பழத் தோலுடன் பசும்பால் அல்லது தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பரு உள்ள இடத்தில் தடவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வர பருக்கள் முற்றிலும் நீங்கி விடும்
இவை அனைத்தும் முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவுகிறது. எனினும் ஒவ்வாமை, எரிச்சல் போன்றவற்றைத் தவிர்க்க சருமத்திற்கு பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது