கால்களில் உள்ள கருமையை நீக்க பெண்கள் பலரும் பெடிக்யூர் செய்கின்றனர். ஆனால், இது அதிக செலவைத் தரும்
வீட்டு வைத்திய முறை
பாதத்தில் உள்ள அழுக்கை நீக்க செய்யும் செலவைத் தவிர்ப்பது நல்லது. இதில் இரசாயனங்கள் அடங்கிய விலையுயர்ந்த பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து சில வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தலாம்
கடலை மாவு
தோல் பராமரிப்புக்கு கடலை மாவு நன்மை பயக்கும். கடலை மாவின் உதவியுடன் கைகள் மற்றும் கால்களை மென்மையாக மற்றும் சுத்தமாக வைக்கலாம். இதற்கு கடலை மாவில் எலுமிச்சைச் சாறு மற்றும் தயிர் கலந்து பேஸ்ட் ஆக மாற்றி அப்ளை செய்யலாம்
மஞ்சள்
மஞ்சள் மற்றும் கடலை மாவு கலவையை சருமத்திற்கு மிகவும் நன்மை தரும். இதற்கு கடலை மாவில் தேன் மற்றும் மஞ்சள் கலந்து பேஸ்ட் தயாரித்து அதை உள்ளங்கால்களில் தடவலாம்
சர்க்கரை கலவை
கால்களை சுத்தமாக மற்றும் மென்மையாக வைக்க வீட்டிலேயே ஃபுட் ஸ்க்ரப் செய்யலாம். இதற்கு தேனுடன் சர்க்கரை கலந்த கலவையை பாதங்களில் தடவலாம்
உருளைக்கிழங்கு
இது தோல் நிறமிகளை அகற்ற உதவுகிறது. இதற்கு உருளைக்கிழங்கில் எலுமிச்சைச் சாறு கலந்து அப்ளை செய்யலாம். அதன் பிறகு, இந்த கரைசலை பருத்தியின் உதவியுடன் பாதங்களில் தடவலாம்
ஓட்ஸ்
கால்களில் படிந்துள்ள அழுக்குகளை நீக்க ஓட்ஸ் உதவுகிறது. இதற்கு ஓட்ஸ் உடன் தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து பாதங்களில் தடவி வர அழுக்குகளை நீக்கலாம்
பப்பாளி
இது ப்ளீச்சிங் தன்மை கொண்டதாகும். பாதங்களில் உள்ள அழுக்குகளைச் சுத்தம் செய்ய பப்பாளியை மசித்து அதில் தேன் கலக்க வேண்டும். இதை அழுக்கு இருக்கும் பகுதியில் தடவி வர நல்ல தீர்வை பெறலாம்
இந்த வீட்டு வைத்தியத்தின் உதவியுடன் கருமை நிற பாதத்தில் இருந்து நிவாரணம் பெற முடியும்