குளிர் கால குதிகால் வெடிப்பை சரி செய்ய ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் அதிக அளவில் செலவு செய்கிறீர்களா? அப்படியானால் ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் வீட்டிலேயே மெழுகு கொண்டு கிரீம் தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஒரு மெழுகுவர்த்தி, இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், இரண்டு ஸ்பூன் கடுகு எண்ணெய், அலோ வேரா ஜெல்
மெழுகுவர்த்தியைத் துருவிக் கொள்ளுங்கள், இத்துடன் தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சூடுபடுத்தவும்.
நன்றாக கலக்கவும்.
இவை அனைத்தையும் மிதமான சூட்டில் வைத்து காய்ச்சினால், சில நிமிடங்களிலேயே கிரீம் பதத்திற்கு வந்துவிடும். அதுவரை அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்கவும்.
கிரீம் தயார்
இப்போது இந்த கலவையை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து, தேவையான போது பயன்படுத்தலாம்.
பயன்படுத்துவது எப்படி?
வெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் உப்பு, சிறிதளவு ஷாம்பு சேர்த்து காலை நன்றாக சுத்தப்படுத்தவும். பின்னர் கால்களை நன்றாக துடைத்துவிட்டு, ஹீல் கிரீமை அப்ளே செய்யவும். முடிந்தால் இரவு முழுவதும் கால்களில் இதனை பத்திரமாக வைத்திருக்கவும். இது உங்களுக்கு நல்ல ரிசல்ட்டைக் கொடுக்கும்.