சருமத்தை உள்ளிருந்து ஜொலி, ஜொலிக்க வைக்கும் 8 உணவுகள்!

By Kanimozhi Pannerselvam
19 Dec 2024, 08:26 IST

அவகேடோ

அவகேடோவில் ஊள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இதனை தினசரி உட்கொள்வது முகத்தின் நெகிழ்ச்சி மற்றும் உறுதியான தன்மைக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன, அவை வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.

அக்ரூட்

வால்நட்ஸ் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம் மற்றும் அமினோ அமிலங்கள் உடலில் வீக்கத்தைக் குறைக்கும்.

மஞ்சள் அல்லது சிவப்பு குடமிளகாய்

இதிலுள்ள பீட்டா கரோட்டினை உடல் வைட்டமின் ஏ ஆக மாற்றிக்கொள்கிறது. இது கொலஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இதனால் சருமத்தில் சுருக்கம் குறைந்து, பளபளப்பு அதிகரிக்கும். இது சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

இதிலுள்ள பீட்டா கரோட்டின் உள்ளடக்கம் தோல் வறட்சி, சுருக்கங்கள் மற்றும் சன் டானைத் தடுக்கிறது.

கிரீன் டீ

பளபளப்பான சருமத்திற்கும் செரிமானத்திற்கும் கிரீன் டீ ஒரு பிரபலமான உணவு. அதன் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள், கேடசின்கள் போன்றவை, பல வழிகளில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் துத்தநாகம், பீட்டா கரோட்டின் மற்றும் லுடீன் நிறைந்துள்ளது, இது சருமத்தை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. இதிலுள்ள சல்ஃபோராபேன் சருமத்தை சூரிய கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கக்கூடியது.

தக்காளி

தக்காளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள் புற ஊதாக் கதிர்களால் சரும பாதிப்புகளைத் தடுக்கும். பீட்டா கரோட்டின், லைகோபீன் மற்றும் லுடீன் ஆகியவை தோல் சேதம் மற்றும் சுருக்கங்களைத் தடுக்கின்றன.