அழகான சருமத்திற்கு நைட் தூங்கும் முன் இத செய்யுங்க

By Gowthami Subramani
21 Jan 2024, 20:48 IST

சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்க தினந்தோறும் சில ஆரோக்கியமான நடவடிக்கைகளைக் கையாள வேண்டும். இதில் சரும புத்துணர்ச்சிக்கு இரவு தூங்கும் முன் கையாள வேண்டிய சில குறிப்புகளைக் காணலாம்

மேக்கப் அகற்றுவது

தூங்குவதற்கு முன் முகத்தை சுத்தமாகவும், மேக்கப், அழுக்கு மற்றும் மாசுக்கள் இல்லாததாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நாள் முழுவதும் குவிந்துள்ள அழுக்குகளை நீக்க தோல் வகைக்கு ஏற்ற மென்மையான சுத்தப்படுத்தியைப் பயன்படுத்த வேண்டும்

சருமத்தை ஈரப்பதமாக்குதல்

சருமத்தை இரவு நேரத்தில் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும். சருமத்தின் தேவைக்கு ஏற்ப நைட் கிரீம் அல்லது ஹைட்ரேட்டிங் செய்யலாம். இது தூங்கும் போது சருமம் புத்துணர்ச்சி அடைய உதவுகிறது

கண் பராமரிப்பு

கண்களைச் சுற்றியுள்ள பகுதி மென்மையானது என்பதால் பாதுகாப்பாக சுத்தம் செய்ய வேண்டும். கண் கிரீம் அல்லது சீரம் பயன்படுத்தலாம். தேவையற்ற இழுப்புகளைத் தவிர்க்க மோதிர விரலைப் பயன்படுத்தி கண் பகுதியைச் சுற்றி மெதுவாகத் தேய்க்க வேண்டும்

நீரேற்றமாக வைப்பது

உறங்கும் முன் தண்ணீர் குடிப்பதன் மூலம் போதுமான அளவு நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். ஆரோக்கியமான சருமத்தைப் பெற உள்ளிருந்து நீரேற்றமாக இருப்பது அவசியமாகும். இது நச்சுக்களை வெளியேற்றி பளபளப்பான நிறத்தை ஊக்குவிக்க உதவுகிறது

ஆரோக்கியமான இரவு உணவு

இரவு நேர சிற்றுண்டிகளாக பாதாம், பெர்ரி அல்லது அக்ரூட் பருப்புகள் போன்ற சருமத்திற்கு உகந்தவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் போன்றவை சருமத்தை உள்ளிருந்து பாதுகாக்கிறது

திரை நேரத்தை வரம்பிடுவது

செல்போன்கள், மடிக்கணினி போன்ற சாதனங்களிலிருந்து உறங்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக திரையில் வெளிப்படுவதைக் குறைக்க வேண்டும். இதன் நீல ஒளி தூக்கத்தை சீர்குலைத்து, சரும ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்

படுக்கைக்கு முன்னதாக மென்மையான யோகா அல்லது சுவாசப் பயிற்சிகள் செய்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். தூங்குவதற்கு முன்னதாக ஓய்வெடுப்பது சிறந்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது