எலுமிச்சை சாற்றை முகத்தில் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

By Kanimozhi Pannerselvam
22 Apr 2025, 20:59 IST

சருமம் பளபளக்கும்

எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை சருமத்தை பளபளப்பாக்குகின்றன.

கரும்புள்ளிகளை போக்கும்

எலுமிச்சை சாறு, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றவும், சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

பருக்களுக்கு குட்பை

எலுமிச்சையில் பருக்கள் வருவதைக் குறைக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

இளமை பொங்கும்

எலுமிச்சை சாறு சருமத் துளைகளை இறுக்கி, சருமத்தை இளமையாகவும் அழகாகவும் காட்டும்.

நேச்சுரல் எக்ஸ்ஃபோலியேட்டர்

எலுமிச்சை சாறு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை மென்மையாக்குகிறது. இது ஒரு இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டராகவும் செயல்படுகிறது.

எண்ணெய் பசை

எலுமிச்சை சாறு எண்ணெய் பசை சருமத்தைக் கட்டுப்படுத்துவதோடு, கரும்புள்ளிகளையும் நீக்குகிறது.

ஸ்கின் ப்ளீச்சிங்

எலுமிச்சை வெயிலில் ஏற்படும் கருமை மற்றும் சூரிய ஒளியால் ஏற்படும் பழுப்பு நிறத்தைக் குறைக்கும் ப்ளீச்சிங் பண்புகளையும் கொண்டுள்ளது.

அரிப்பில் இருந்து நிவாரணம்

எலுமிச்சையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை அரிப்பு மற்றும் எரிச்சலிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன.