சருமம் பளபளப்பாக இருக்க பலர் பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள், இதற்கு 2 ஸ்பூன் பால் மட்டுமே போதும் என்றால் நம்ப முடிகிறதா.
முகத்தில் பாலை மேக்கப் ரிமூவராக பயன்படுத்தலாம். இதற்கு பஞ்சில் பால் நனைத்து முகத்தில் உள்ள மேக் அப்பை துடைக்கலாம்.
உங்கள் முகத்தை மசாஜ் செய்ய பால் பயன்படுத்தலாம். 2 ஸ்பூன் பால் மற்றும் தேன் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்யலாம்.
முகத்தில் பாலை சுத்தப்படுத்தியாகவும் பயன்படுத்தலாம். பச்சை பால் ஒரு சுத்திகரிப்பு முகவராக பயனுள்ளதாக இருக்கும்.
2 ஸ்பூன் பச்சை பாலில் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் ஆக செய்து முகத்தில் தடவலாம். 10 நிமிடங்களுக்கு பிறகு இதை நன்கு கழுவ வேண்டும்.