மூளைத்திறனை மேம்படுத்தும் மகிழ்ச்சி ஹார்மோன்கள்

By Ishvarya Gurumurthy G
01 Jun 2024, 15:30 IST

செரோடோனின், டோபமைன், எண்டோர்பின், ஆக்ஸிடோசின் என்ற மகிழ்ச்சி ஹார்மோன்கள் மூளைத்திறனை மேம்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது.

செரோடோனின்

சூரிய ஒளியில் விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது, பருப்பு வகைகளை உண்பதன் மூலம் செரோடோனினை அதிகரிக்கலாம். இது மனநிலை, தூக்கம், பசியின்மை மற்றும் செரிமானத்தை ஒழுங்குபடுத்துகிறது.

டோபமைன்

நல்ல தூக்கம், மீன், முட்டை, பால் உணவுகளை உட்கொள்வதன் மூலம் டோபமைனை அதிகரிக்கலாம். இது இன்பம், ஊக்கம் மற்றும் கவனம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

எண்டோர்பின்

சிரிப்பு, சுவாச பயிற்சி, இசை, கார உணவுகள் மூலம் எண்டோர்பினை அதிகரிக்கலாம். இது இயற்கையான வலி நிவாரணியாகவும், மனநிலையை மாற்றும் சக்தியாகவும் செயல்படுகின்றன.

ஆக்ஸிடோசின்

அரவணைப்பு, பிணைப்புக்கு ஆக்ஸிடோசின் உதவும். இது பிணைப்பு, நம்பிக்கை மற்றும் சமூகத் தொடர்பை ஊக்குவிக்கிறது.

குழந்தைகளின் மகிழ்ச்சியான ஹார்மோன் அளவை அதிகரிக்க பெற்றோர் தங்கள் முயற்சியை கண்டிப்பாக செய்ய வேண்டும்.