டைபாய்டு காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? அதன் அறிகுறிகள் எப்படி வெளிப்படும் என்பதை இங்கே காண்போம்.
தலைவலி
உங்களுக்கு தாங்க முடியாத அளவுக்கு தலை வலி இருந்தால் அது டைபாய்டு அறிகுறியாக இருக்கலாம். தலை வவிக்கு பல காரணங்கள் இருக்கும். இருப்பினும் இது டைபாய்டு நோய் முதல் அறிகுறியாக இருக்கிறது.
மலச்சிக்கல்
திடீரென உங்களுக்கு மலம் வெளிவருவதில் சிறமம் அல்லது அதீத வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், அது டைபாய்டு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
காய்ச்சல்
எதிர்பாராத விதமாக அதிகபடியான காய்ச்சல் ஏற்பட்டால், அது டைபாய்டு ஆக இருக்கலாம். இது விட்டு விட்டு ஏற்படலாம்.
பசியின்மை
நீங்கள் சாப்பிடாமல் இருக்கும் போதும், உங்களுக்கு பசி உணர்வு ஏற்படவில்லை என்றால், அது டைபாய்டு அறிகுறியாக இருக்கலாம்.
ரோஸ் நிற புள்ளிகள்
உங்களின் மார்பு பகுதியில், ரோஸ் நிறத்தில் புள்ளிகள் தென்பட்டால், அது டைபாய்டு நோயாக இருக்கலாம்.
சோர்வு
உங்களுக்கு உடல் வலி, சோர்வு அல்லது பலவீனமான உணர்வு ஏற்பட்டால், அது டைராய்டு அறிகுறியாக இருக்கலாம்.
இந்த பதிவில் கூறப்பட்டுள்ள அறிகுறிகள் பிற காரணங்களாலும் ஏற்படலாம். இருப்பினும், இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.