முடி வெட்ட சலூனுக்கு போகும் போது குறிப்பிட்ட விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம்.
கத்திரிக்கோல்
பலருக்கும் ஒரே கத்திரிக்கோல் தான் பயன்படுத்தப்படுகிறது. கத்திரிக்கோல் ஒருவருக்கு வெட்டப்பட்ட உடன் முறையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஷேவிங் பிளேடு
ஷேவிங் கத்தியில் பொருத்தப்படும் பிளேடு மாற்றப்பட்டுள்ளதா என்பதை சோதிப்பது மிக முக்கியம்.
சலூன் துண்டு
சலூனில் துண்டை வைத்து துடைப்பது அவசியம். இந்த துண்டு நீங்களே எடுத்துச் செல்வது நல்லது. பலருக்கு ஒரே துண்டு பயன்படுத்துவது தோல் வியாதியை குறைக்க உதவும்.
தலைமுடி ஹீட்டர்
ஹீட்டர் அதிக நேரம் பயன்படுத்தும் பட்சத்தில் முடி கொட்ட அதிக வாய்ப்புள்ளது. எனவே ஹீட்டர் பயன்படுத்தும் போது கவனமாக இருக்கவும்.