செரிமான ஆரோக்கியம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்று. எனவே செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் போது அதிக கவனிப்பு வேண்டும்
செரிமான அமைப்பு
செரிமான அமைப்பு மோசமடைந்தால், பல வகையான நோய்கள் ஏற்படக்கூடும். இந்த செரிமானம் தொடர்பான பிரச்சனைகளின் அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம்
தூக்கமின்மை
பல நேரங்களில் தூக்கமின்மை காரணமாக மக்கள் சிரமப்படுவர். இது செரிமான பிரச்சனைக்கான அறிகுறியாக இருக்கலாம். நீடித்த மோசமான செரிமானம் தலைவலியை ஏற்படுத்தலாம்
உடல் சோர்வு
செரிமான அமைப்பு பாதிப்பால் உடல் சோர்வு ஏற்படலாம். வயிற்று உபாதைகளால், உடலுக்குப் போதிய அளவு ஊட்டச்சத்து கிடைப்பதில்லை
வயிற்றுக்கோளாறு
வயிறு விரைவில் தொந்தரவு ஏற்பட்டால், அது செரிமான பிரச்சனையால் ஏற்படலாம். இதைத் தவிர்க்க நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்
தோல் பிரச்சனைகள்
நீண்ட காலமாக செரிமான பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அது தோல் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இது தோலை வறண்டு போகச் செய்கிறது
முடி உதிர்தல்
செரிமான அமைப்பு சேதத்தால் முடி வேகமாக உதிர ஆரம்பிக்கலாம். ஏனெனில், செரிமானப் பிரச்சனை முடியை முற்றிலும் வலுவிலக்கச் செய்கிறது
மோசமான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை
ஆரோக்கியமற்ற உணவுகள் பெரும்பாலும் செரிமான பிரச்சனைகளையே ஏற்படுத்தலாம். இதைத் தவிர்க்க, உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம்
சரியான செரிமானத்திற்கு
செரிமான பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள், பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து, தானியங்கள் மற்றும் கொட்டைகள் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்
இவை அனைத்தும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை உணர்த்தும் அறிகுறிகளாகும்