மழைக்காலத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு வழிகள்!

By Karthick M
02 Aug 2024, 14:13 IST

குளிர்ந்த உணவு

மழைக்காலத்தில் ஐஸ்க்ரீம், கூல் ட்ரிங்க்ஸ் போன்ற குளிர்ந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இது நோய்வாய்ப்படுத்தலாம்.

தெருவோர உணவுகள்

மழைக்காலத்தில் தெருவோர உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதுல பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

லெதர் காலணிகள் வேண்டாம்

மழைக்காலத்தில் லெதர் காலணிகள் வேண்டாம். லெதர் காலணிகளால் தண்ணீரை விரைவில் வெளியேற்ற முடியாது. இது பூஞ்சை தொற்று பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆரோக்கியமான உணவுகள்

ஆரோக்கியமான மூலிகை உணவுகளை சாப்பிடுங்கள். இஞ்சி, பூண்டு, மஞ்சள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேருங்கள். மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டியது அவசியம்.