வயிற்று வலி அதிகமா இருக்கா? அப்ப இதெல்லாம் தான் காரணம்

By Gowthami Subramani
31 Oct 2023, 17:37 IST

எல்லா வயதினரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று வயிற்று வலி ஆகும். இதற்கு மோசமான உணவு முறை மட்டும் காரணமல்ல. வேறு சில காரணங்களும் உள்ளன

சில சமயங்களில் லேசான வயிற்று வலி ஏற்படும் இவை தானாக சரியாகலாம். கடுமையான வயிற்று வலி சமாளிக்க முடியாததாக இருக்கும்

அல்சர்

வயிற்றில் ஏற்படும் புண்களே வயிற்று வலிக்குக் காரணமாகும். பாக்டீரியா தொற்று அல்லது ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை நீண்ட நாள் எடுத்துக் கொள்வதை அல்சரை உண்டாக்கும்

வயிற்றுப்போக்கு

தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்படுவது உடலில் நீரிழப்பு ஏற்படுவது உடலை பலவீனமாக்கும். இது வயிற்று வலியை உண்டாக்கும். வயிற்றுப்போக்கு ஏற்படாமல் தவிர்க்க நார்ச்சத்து மிகுந்த உணவுகள், நீர்ச்சத்து ஆதாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்

கல்லீரல் அழற்சி

கல்லீரலில் ஏற்படும் தொற்று காரணமாக வயிற்று வலி ஏற்படும். இது நாள்பட்ட தொற்றின் காரணமாக ஏற்படலாம். இதிலிருந்து விடுபட தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்

பித்தப்பை கற்கள்

பித்தப்பையில் நீர் கட்டியாகி வளர்ந்து, சிறு சிறு கற்கள் அளவிற்கு உருமாறி பித்தப்பை கற்களாக மாறும். இவை லேசானது முதல் கடுமையான வலியை உண்டாக்கலாம். இதை வளர விட்டால் கணைய அழற்சி, மஞ்சள் காமாலை போன்றவற்றை ஏற்படுத்தலாம்

மலச்சிக்கல்

மலம் இறுகிப்போவதே மலச்சிக்கலுக்குக் காரணமாகும். குறைவான குடல் இயக்கங்களால் ஏற்படும் இதற்கு நீரிழப்பு, மோசமான உணவுப் பழக்கம் போன்றவை காரணமாக இருக்கலாம். இதனால் வயிற்று வலி ஏற்படலாம்