வயிற்று வலி ஏற்பட சில பொதுவான காரணங்கள் இருக்கலாம். இதில் அடிக்கடி வயிற்று வலி வர காரணங்கள் சிலவற்றைக் காணலாம்
குறைந்த தண்ணீர் குடிப்பது
தாகம் என தவறாக எண்ணுவது, மிகக் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது அல்லது திட உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது போன்ற பழக்க வழக்கங்கள் அடிக்கடி வயிற்று வலியை ஏற்படுத்தலாம்
அதிகம் உண்பது
விருப்பமான உணவு கிடைத்தாலும், பசியை விட அதிகம் உட்கொள்வது வயிற்று வலிக்கு முக்கிய காரணமாகிறது
சிறுநீரகக் கல்
சிறுநீரகக் கல் பிரச்சனையால் வயிற்றில் தாங்க முடியாத வலி உண்டாகலாம். இந்த பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவது நல்லது
பசி
சிலர் நீண்ட நேரம் உணவு உண்ணாமல் இருப்பது வயிற்று வலி மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம்
ஜங்க் ஃபுட்
வறுத்த, காரமான உணவு மற்றும் நொறுக்குத் தீனி போன்றவை வயிற்றுப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதை அடிக்கடி எடுத்துக் கொள்ளாமல் 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே சாப்பிட வேண்டும்