உயரமாக வளர என்ன செய்வது?
குழந்தைகள் வளர பெற்றோர்கள் உடல் மற்றும் மன வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். உயரம் அதிகரிக்க உதவும் சில இயற்கையான வழிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நீச்சல் அவசியம்
குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும். இது உடல் வலுவடைய உதவுவதோடு உயரத்தையும் அதிகரிக்க உதவும்.
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு
குழந்தைகள் வளர அவர்களின் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உணவில் கால்சியம், புரதம், வைட்டமின் டி மற்றும் பிற நல்ல ஊட்டச்சத்துக்கள் இருப்பதை உறுதிப் படுத்துங்கள்.
வெளிப்புற விளையாட்டு
குழந்தைகளை வீட்டுக்கு வெளியே விளையாட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குழந்தைகள் சரியாக வளர்ந்து உயரம் பெற உதவுகிறது.
ஆரோக்கியமான தூக்கம்
குழந்தைகள் தினமும் 8 மணிநேரத்திற்கு மேல் தூங்குவதை உறுதிப்படுத்துங்கள். தூங்கும் குழந்தைகள் ஹார்மோன் உருவாகின்றன. இது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
பிற நல்ல பழக்கங்கள்
ஸ்கிப்பிங், தொங்குதல் பயிற்சி, சூரிய நமஸ்காரம், யோகா போன்றவையும் உயரத்தை அதிகரிக்க உதவும் சிறந்த வழிகளாகும்.