இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன்களை பயன்படுதி வருகின்றனர். குறிப்பாக இரவு தூங்கும் முன் இருட்டில் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால், இது கண்கள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம்
நிபுணர் கருத்து
ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் மருத்துவர் ஷ்ரே ஷர்மா அவர்கள் கூறுகையில்,”மொபைலில் இருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கக் கூடிய கதிர்வீச்சு கண்கள் மற்றும் மூளையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த சூழ்நிலையில் நீண்ட நேரம் தொலைபேசி பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறுகிறார்
கண்கள் வறண்டு போகுதல்
நீண்ட நேரம் போன் பயன்பாடு, கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கக் கூடிய திரவத்தை வறண்டு போகச் செய்கிறது. இதனால், கண்பார்வை குறையத் தொடங்கலாம்
மூளைக்கட்டி
இரவு நேரங்களில் இருட்டில் நீண்ட நேரம் போன் பயன்படுத்துவது மூளையில் கட்டி போன்ற நோய்களை உண்டாக்கலாம். இதில் மொபைலில் இருந்து வெளியிடப்படும் கதிர்வீச்சு மூளைக்குள் செல்கிறது
விந்தணு எண்ணிக்கை குறைவு
அதிகம் மொபைல் போன் பயன்படுத்துவது, ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையைக் குறைக்கலாம். இதற்கு போனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்களே காரணமாகும்
தூக்கம் இல்லாமை
அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவது, தூக்கப் பிரச்சனையை ஏற்படுத்தலாம். மேலும், தினமும் 8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்ய வேண்டும்
மன அழுத்தம்
மொபைல் பயன்பாட்டினால் மூளையின் தசைகளில் பதற்றம் உண்டாகும். இது மன அழுத்தம், பதற்றம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும்
தற்காப்பு குறிப்புகள்
மொபைல் போனைப் பயன்படுத்தும் போது குறைவான வெளிச்சத்தில் வைத்திருக்க வேண்டும். இது தவிர, இரவில் தூங்கும் முன் கண்களுக்கு அருகில் வைக்காமல் தூரமாக வைத்துக் காணலாம்
அதிகம் மொபைல் போன்களைப் பயன்படுத்துவது கண் ஆரோக்கியத்துடன், உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. எனவே அதிக நேரம் பயன்படுத்துவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்