இந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது பக்க விளைவுகளை ஏற்படுத்தும்

By Karthick M
31 Jul 2025, 23:02 IST

குறிப்பிட்ட உணவுகளை அதிகமாக உட்கொண்டால் இது உடலுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். அது எந்த வகை உணவு என பார்க்கலாம்.

பியூரின் என்பது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் காணப்படும் ஒரு வேதியியல் சேர்மம் ஆகும். இது தாவர அடிப்படையிலான உணவுகளில் அதிகமாகக் காணப்படுகிறது.

பியூரின் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

மூட்டு வலி, கீல்வாதம் பிரச்சனை, சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதிப்பு பிரச்சனை உள்ளவர்கள் எந்த நிலையிலும் பியூரின் நிறைந்த உணவை சாப்பிடக் கூடாது.

பியூரின் அதிகம் உள்ள உணவுகள் சிவப்பு இறைச்சிகள், கோழி இறைச்சிகள், குறிப்பிட்ட மீன் வகைகள் மட்டும், பீர், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது.