நாசி கால்வாயின் வழியாக இரத்தப்போக்கு பலருக்கும் ஏற்படும், இதில் குழந்தைகள் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான காரணம் என்னவென்று பார்க்கலாம்.
காலநிலை காரணம்
காலநிலை மாற்றத்தின் காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி வரும். இதில் மூக்கில் இரத்தம் வடிதலும் அடங்கும்.
உலர் மூக்கு
மூக்கு உலர்ந்து காணப்படுவது மூக்கில் இரத்தம் வருவதற்கு மிகவும் பொதுவான காரணமாக அமைகிறது.
உயர் இரத்த அழுத்தம்
இதயத்தில் தமனிகள் சுருங்குவது இரத்த அழுத்தத்தை உயர்த்துவதாகக் கூறப்படுகிறது. இதனால், உள் இரத்தப்போக்கு ஏற்படலாம்.
மூக்கு உடைதல்
மண்டை ஓட்டில் ஏற்படும் திடீர் தாக்கத்தின் காரணமாக, குறிப்பாக மூக்கில் சில வெளிப்புற கடினமான தாக்கம் காரணமாக உடைப்பு ஏற்பட்டு இரத்தம் வரலாம்.