எந்தெந்த வைட்டமின் குறைந்தால் என்னென்ன நோய்கள் வரும்?

By Karthick M
05 Oct 2023, 00:52 IST

வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்

சத்துக்கள் இல்லாததால் உடலில் பல நோய்கள் வருகின்றன. உடலில் பல வைட்டமின்கள் உள்ளன. இதன் சிறிதளவு குறைபாடும் உடலை உள்ளிருந்து பலவீனப்படுத்தும். ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். அது என்னென்ன என்று பார்க்கலாம்.

வைட்டமின் ஏ குறைபாடு

இந்த வைட்டமின் தோல், முடி, நகங்கள், பற்கள், ஈறுகள் மற்றும் எலும்புகள் போன்ற உடலின் பல உறுப்புகளின் செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது. இதன் குறைபாட்டால் கண் நோய்களும் வரும்.

வைட்டமின் பி குறைபாடு

உங்கள் வைட்டமின் பி12 அளவு குறைவாக இருந்தால் பலவீனம், சோர்வு, சமநிலை இழப்பு, கை கால்களில் கூச்ச உணர்வு போன்றவை ஏற்படும்.

வைட்டமின் சி குறைபாடு

வைட்டமின் சி குறைபாடு நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். இது தசைகள் மற்றும் மூட்டுகளில் சோர்வு, வலி, ஈறுகளில் இரத்தப்போக்கு, பாதங்களில் வெடிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

வைட்டமின் டி குறைபாடு

வைட்டமின் டி குறைபாடு குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் என்ற நோயை உண்டாக்கும். எலும் ஆரோக்கயத்திற்கு இது மிக முக்கியம். இதன் குறைபாடு உடல் கொழுப்பை அதிகரிக்கும்.

வைட்டமின் இ குறைபாடு

வைட்டமின் இ குறைபாடு உடல் உறுப்புகளில் அடிக்கடி உணர்வின்மை, தசைகள் பலவீனம், கண்களில் பலவீனம் போன்ற சில அறிகுறிகளை ஏற்படுத்தும். வைட்டமின் இ பல நோய்களுக்கு நன்மை பயக்கும்.

வைட்டமின் கே குறைபாடு

வைட்டமின் கே குறைபாட்டின் பொதுவான அறிகுறிகள் இரத்தக் கசிவு அதிகரிப்பு, மாதவிடாய் போது அதிக இரத்தப்போக்கு போன்றவை ஏற்படுத்தும்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது மிகுந்த நன்மை பயக்கும். உடல்நலம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.