கம்ப்யூட்டர் முன்பு வேலை பார்ப்பவர்கள் நீண்ட நேரம் குனிந்த படியே வேலை பார்ப்பது, மோசமான தோரணையாக கூறப்படுகிறது. ஏனெனில் வேலைக்காக நீண்ட நேரம் வளைந்த படியே உட்கார்ந்திருப்பதால் முதுகு எலும்பு இயல்பாகவே வளைய ஆரம்பிக்கிறது.
கம்ப்யூட்டர் பாகங்களில் கவனம் தேவை
நீங்கள் இன்னும் அந்த லேப்டாப்பின் டச்பேடைப் பயன்படுத்தினால், தனியான கீபோர்டு, மவுஸ் மற்றும் லேப் டெஸ்க் ஆகியவற்றைப் பயன்படுத்துவது முக்கியமாகும். இந்தச் சாதனங்களைப் பயன்படுத்தினால், மடிக்கணினியின் முன்பு நீண்ட நேரம் குனிந்திருப்பதற்கு பதிலாக நேராக உட்கார்ந்து பணியாற்றலாம். மேலும் இருக்கையில் வசதியாக அமர்ந்து கொண்டு வேலை பார்ப்பது முதுகு எலும்புகள் மீதான அழுத்தத்தைக் குறைக்கும்.
உங்கள் முக்கிய தசைகளுக்கு பயிற்சியளிப்பது நீண்ட நேரம் உட்கார்ந்த நிலையில் இருக்க உடலை தயார்ப்படுத்தும். உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்கள் முதுகிற்கு ஏதாவது சப்போர்ட்டை பயன்படுத்துவது, முதுகெலும்பை ஆதரிக்கும், இது இன்டர்வெர்டெபிரல் டிஸ்க்குகள் மற்றும் மூட்டுகளில் அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
இந்த சிறிய அசைவுகள் போதும்
நாற்காலியில் அமர்ந்த படியே கை மற்றும் கால்களை நீட்டி மடக்குவது, இடுப்பு மற்றும் கழுத்து பகுதியை லேசாக திருப்புவது, மேஜை மீது கைகளை நீட்டி வைத்து நேராக சிறிது நேரம் படுப்பது போன்ற பயிற்சிகளை செய்வது முதுகு எலும்பை ரிலாக்ஸ் செய்ய உதவும்.
தோரணையில் கவனம் செலுத்துங்கள்
உங்கள் கால்களை தொடர்ந்து குறுக்காக வைத்திருக்கிறீர்களா? நீங்கள் ஒற்றைக் காலில் அமர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் ஒரு பக்கம் சாய்ந்திருக்கிறீர்களா? என கவனிக்க வேண்டும், அப்படியானால் உடனடியாக உங்கள் தோரணையை நீங்கள் மாற்ற வேண்டும்.